நாவின்ன பொது விளையாட்டு மைதானத்திற்கான பார்வையாளர் அரங்கு...
கொட்டாவ மயானத்திற்கான புதிய இறுதிச் சடங்கு மண்டபம்...
தலவத்துகொடைக்கு பல்நோக்கு மையம்...
2024 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி திட்டத்தின் கீழ், பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன ஆகியோருக்கு ஒதுக்கப்பட்ட ஏற்பாடுகளின் மூலம் மஹரகம நகரசபையின் நாவின்ன பொது விளையாட்டரங்கின் பார்வையாளர் அரங்கின் நிர்மாணப் பணிகள், தலவத்துகொட பல்நோக்கு நிலையம் மற்றும் கொட்டாவ மயானத்திற்கான புதிய இறுதிச் சடங்கு மண்டபம் ஆகியவற்றின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் இன்று (2024.07.17) பிரதமர் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதம் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் உரையாற்றிய பிரதமர்-
தலவத்து கொட நகரில் புதிய வர்த்தக நிலையம் மற்றும் வீதி நிர்மாணிக்கப்பட்டமையினால் இடம்பெயர்ந்த மக்களுக்கும், நகரின் அபிவிருத்திக்காக வெளியேற வேண்டி ஏற்பட்டவர்களுக்கும், புதிய வர்த்தக சமூகத்தினருக்கும் கடைகள் மற்றும் தேவையான வசதிகளை செய்து கொடுத்து வியாபாரம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர்கள் முன்னோடிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். புதிதாக ஒன்றை உருவாக்கி அதை நடைமுறைக்கு கொண்டு வர முயற்சிப்பவர்கள் முன்னோடிகளாக சவால்களை எதிர்கொள்கின்றனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த ஆண்டு மிகக் குறைந்த செலவுத் தலைப்புகளில் அபிவிருத்திப் பணிகளுக்கு அங்கீகாரம் அளித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்களிடம் பணம் இருக்கவில்லை.
தனியார் துறையினால் தான் வர்த்தக சமூகமாக முன்னேர முடியும். இந்த தாய்மார்களும் தந்தைமார்களும் அதிகாலையில் கடையைத் தொடங்கி இரவு வரை கடைகளைத் திறந்து சிரமத்துடன் வியாபாரம் செய்கிறார்கள். அதை நாம் மதிக்க வேண்டும். அரச கடையாக இருந்தால் மேலதிக நேர கொடுப்பனவு வழங்க வேண்டும். இது சில சமயங்களில் சம்பளத்தை விட அதிகமாக இருக்கும்.
புதிய பல்நோக்கு தொகுதியின் மூலம் தலவத்து கொட 24 மணி நேரமும் விழித்திருக்கும் நகரமாக மாறியுள்ளது. இத்தகைய உள்ளக மையங்கள் நிர்மாணிக்கப்பட்ட பல நகரங்கள் 24 மணி நேரமும் விழித்திருக்கும் நகரங்களாக மாறிவிட்டன. ஒரு நகரத்திற்கு உள்ளக விளையாட்டு அரங்கம் தேவை. சிறு பிள்ளைகளுக்கு சிறிவர் திரைப்படங்களை பார்க்ககூடிய இடம் தேவை. தாய்மார்கள் பல்வேறு சுயதொழில் வகுப்புகளை நடத்தலாம். அந்த அடிப்படையில்தான் நமது நாட்டின் எதிர்காலத்தை முன்னேற்றமானதாக மாற்ற முடியும்.
நாவின்ன விளையாட்டு மைதானத்தை மாநகர சபைக்கு சுவீகரித்து மஹரகமைக்கு விளையாட்டு மைதானத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கையை வெற்றியடையச் செய்யுமாறு பிரதேசவாசிகளின் தொடர்ச்சியான கோரிக்கையாக இருந்தது. நாங்கள் அந்த நடவடிக்கையை எடுத்தோம். பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, ஒரு திட்டத்துடன் பராமரித்து மேம்படுத்தப்பட்டது. நானும் யதாமினி குணவர்தனவும் இந்த திட்டத்தை முடிக்க நகர சபையுடன் இணைந்து இன்று ஆரம்பித்துள்ளோம். நிறைவு செய்யும் பணிகள் நகர சபையின் பொறுப்பாகும்.
அதிபர்களே, எங்கள் பிள்ளைகள் திட்டத்தை முடித்த பிறகு தங்கள் திறமைகளை மேம்படுத்துவதற்காக காத்திருக்கிறார்கள். மஹரகம வித்யாகார கல்லூரி, ஜனாதிபதி கல்லூரி, புவனேகபாகு கல்லூரி மற்றும் மத்திய கல்லூரியின் பிள்ளைகள் இந்நிகழ்வில் கலந்துகொள்வதில் பெருமிதம் கொள்கின்றனர். இது உங்கள் அனைவருக்குமாக கட்டப்பட்டது. இந்த திட்டங்களை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறோம்.
இந்நிகழ்வில் மேல்மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக்க, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, பிரதேச செயலாளர், மஹரகம நகரசபை செயலாளர் உட்பட அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு