ஆசிய கிண்ணத்தை வென்றெடுத்த இலங்கை கிரிக்கெட் அணியினருக்கு பிரதமரின் வாழ்த்துச் செய்தி.

"இலங்கை இன்று சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் வரலாற்றுச் சாதனைகளைப் படைத்துள்ளது. இன்றைய தினம் இரண்டு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிக்கிண்ணத்தை வென்றெடுத்துள்ளனர் எமது நாட்டு அணியினர்.
அவ்வகையில், இலங்கை தேசிய கிரிக்கெட் அணியினர் ஆசிய கிண்ணத்தை வென்றெடுத்து எமது தாய்நாட்டிற்குப் பெருமை தேடித் தந்துள்ளனர். முதலாவது போட்டியில் தோல்வியடைந்தாலும் அடுத்தடுத்து வந்த போட்டிகளில் வெற்றிவாகை சூடுமளவிற்கு அவர்களிடம் காணப்பட்ட தன்னம்பிக்கையையும் துணிச்சலையும் நான் பெரிதும் பாராட்டுகின்றேன். அவர்களிடையே காணப்பட்ட குழு மனப்பான்மை, ஒற்றுமை, அர்ப்பணிப்பு இத்தகைய மகத்தான வெற்றியை எம் நாட்டிற்கு பெற்றுத்தந்துள்ளது. எ‌ந்தவொரு கஷ்டத்தையும் மிக இலகுவாக கடந்து செல்ல இலங்கையால் முடியும்.
இம்மாபெரும் வெற்றியை இலங்கைக்கு ஈட்டித்தந்த எமது கிரிக்கெட் வீரர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதுடன், அதற்கான வழிகாட்டல்களையும், பயிற்சியையும் வழங்கிய பயிற்றுவிப்பாளர்களுக்கும், முகாமைத்துவத்தினருக்கும், நிருவாகத்தினருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்."

தினேஷ் குணவர்தன
பிரதமர்