வாழ்த்துச் செய்தி

பன்னெடுங் காலமாக, இலங்கை வாழ் இஸ்லாமியர்கள் ரமழான் காலத்தில் சமயக் கிரியைகள் மற்றும் இறை தியானங்களில் ஈடுபட்டு, அடுத்த மனிதர்களுக்கு உதவி உபகாரங்களைச் செய்து நாட்டின் கலாசார மற்றும் சமய பன்முகத்தன்மைக்கு முன்மாதிரியான அர்த்தத்தை வழங்குகிறார்கள்.

நாட்டின் நிர்வாகச் செயற்பாடுகள், வர்த்தகத் துறைகள், கல்வி மற்றும் பல்வேறு தொழிற் துறைகள், விளையாட்டு மற்றும் கலாசாரத் துறைகளில் இலங்கை முஸ்லிம் சமூகம் ஆற்றிவரும் செயற்திறமான பங்களிப்பிற்காக இச்சந்தர்ப்பத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு கடினமான காலகட்டத்தைக் கடந்து தற்பொழுது நாம் அடைந்திருக்கும் வெற்றி இலக்குகளைத் தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்வதற்கு முஸ்லிம் சமூகத்தினர் செய்த அர்ப்பணிப்பை முக்கியமான இந்த காலகட்டத்தில் நான் தொடர்ந்தும் எதிர்பார்க்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

தினேஷ் குணவர்தன (பா.உ),
பிரதமர்,
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு,

2024 ஏப்ரல் 10