தேசிய வெசாக் விழா பிரதமர் தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அரச வெசாக் விழா பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நேற்று (04) சிலாபம் கெபெல்லவ ரத்னசிறி பிரிவேனா விகாரையில் ஆரம்பமானது.

நான்கு நினைவு முத்திரைகள் வெளியீடு, பிரகடனப்படுத்தப்பட்ட ஆறு புண்ணிய பூமிகளின் சன்னஸ்பத்திரங்களை வழங்கிவைத்தல் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் இங்கு இடம்பெற்றன.

இந்நிகழ்ச்சியில் மகாசங்கத்தினர், மக்கள் பிரதிநிதிகள், தூதுவர்கள் மற்றும் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.