இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 2296/05 ஆம் இலக்க 2022/06/09 ஆந் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பின்படி, வவுனியா நகரசபை மாநகர சபையாக அமைக்கப்பட்டது.

இந்த முக்கிய நிகழ்வை நினைவுகூரும் முகமாக பிரதமர் தினேஷ் குணவர்தன வவுனியா மாநகரசபையின் இணையத்தளத்தை ஆரம்பித்து வைத்த போது. வாடிக்கையாளர்களின் வசதி கருதி இங்கு டிஜிட்டல் சேவைகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

வட மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம். சார்ள்ஸ், இராஜாங்க அமைச்சர்களான ஜானக வக்கும்புர, அசோக பிரியந்த, காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான குலசிங்கம் திலீபன், யதாமினி குணவர்தன, வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.