வாழ்த்துச் செய்தி

இலங்கை சமூகத்தின் இஸ்லாமிய சகோதரத்துவத்தைப் பாதுகாத்து, அவநம்பிக்கை, சந்தேகம் நீங்கிய சிறந்ததோர் சமூகத்திற்கான போதனைகளை உறுதியாகக் கடைப்பிடிப்போம்.

முஸ்லிம் சமூகத்தினர் பன்னெடுங்காலமாக ரமழான் காலத்தில் தங்களின் சமயக் கிரியைகளிலும் பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டு, ஏனையவர்களுக்கு உதவி உபகாரங்களைச் செய்து நாட்டின் கலாசார மற்றும் சமய பன்முகத்தன்மைக்கு முன்மாதிரியான அர்த்தத்தை வழங்கிவருகின்றனர். உலகம் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வரும் இவ்வேளையில் பாதிக்கப்பட்ட மக்கள் மீதான மனிதாபிமான உணர்வை வளர்த்து சிறந்ததோர் சூழலை கட்டியெழுப்புவதற்கு ரமழான் பண்டிகை காலம் பெரிதும் உதவுகிறது.

இலங்கை முஸ்லிம் சமூகம், நாட்டின் நிர்வாக செயற்பாடுகளுக்கும் வர்த்தகத் துறை, கல்வி மற்றும் பல்வேறு தொழில் துறைகள், விளையாட்டு மற்றும் கலாசார துறைகளுக்கும் ஆற்றிவரும் செயற்திறமான பங்களிப்புக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நாம் தற்போது கடந்து வரும் மிகவும் கடினமான இலக்குகளை வெற்றிகொள்வதற்கு அனைத்து இனங்களினதும் ஒற்றுமையானதும் செயற்திறமானதமான பங்களிப்புகளை மேலும் பலமாக முன்கொண்டு செல்வதற்கு இந்த விசேடமான காலகட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் அர்ப்பணிப்பை எதிர்பார்க்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் இனிய ஈதுல் பித்ர் வாழ்த்துக்கள்.

தினேஷ் குணவர்தன
பிரதமர்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு

2023 ஏப்ரல் 21

Download Release