பிரிட்டனின் புதிய பிரதமருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

பிரித்தானிய பாராளுமன்றத் தேர்தலில் தொழிற் கட்சியின் தலைவராக மகத்தான வெற்றி பெற்று நீங்கள் பிரதமராக பதவியேற்றுள்ளதையிட்டு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக உங்கள் தலைமையில் ஒரு வலுவானதும் ஸ்திரமானதுமான அரசாங்கத்தை அமைப்பதை, பிரதமராக வரவேற்கும் அதேவேளையில், பிரித்தானியாவுடனான ஆழமான இருதரப்பு நட்புறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது.

மாண்புமிகு பிரதமர் அவர்களே, எனது உயர்ந்த மரியாதையை தயவுடன் ஏற்றுக்கொள்ளுங்கள்.

தினேஷ் குணவர்தன (பா.உ)
பிரதமர்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு

2024.07.06