136 வருடங்களுக்கு முன்னர் இலங்கையின் முதலாவது பௌத்த கொடி ஏற்றப்பட்ட கொட்டாஞ்சேனை, தீபதுத்தமாராம பண்டைய தாய் விகாரையில் பௌத்த கொடியை ஏற்றி வைத்து பிரதமர் வெசாக் வாரத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைப்பு..

பிரதமர் தினேஷ் குணவர்தன கொட்டாஞ்சேனை தீபதுத்தமாராம பண்டைய தாய் விகாரையில் இன்று (02) பௌத்த கொடியை ஏற்றி வெசாக் வாரத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

பௌத்த கொடி உருவாக்கப்பட்ட பின்னர், அது முதன்முதலில் 1885 ஆம் ஆண்டில் கொட்டாஞ்சேனை தீபதுத்தமராம பண்டைய தாய் விகாரையில் ஏற்றப்பட்டது.

இங்கு கருத்து தெரிவித்த பிரதமர்-

பௌத்த கொடி உருவாக்கப்பட்ட பின்னர் இந்தப் புண்ணிய பூமியில் வைத்துத் தான் பௌத்தக் கொடி ஏற்பப்பட்டு உலகிற்கு வழங்கப்பட்டது.

புத்தபெருமானின் பிறப்பு, ஞானம் பெறுதல் மற்றும் பரிநிர்வாணம் அடைந்த நாளான வெசாக், பல நூற்றாண்டுகளாக பௌத்தர்களால் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில், இந்த புனித பூமியில் முதலில் பௌத்த கொடி ஏற்றப்பட்டு உலகிற்கு அளிக்கப்பட்டது.

வெசாக் வாரத்தின் ஆரம்பத்தை குறிக்கும் வகையில் மீண்டும் பௌத்த கொடியை ஏற்றுவதற்கு வஸ்கடுவே மகிந்தவங்ச நாயக்க தேரர் மேற்கொண்ட நடவடிக்கைக்கு பிரதமர் என்ற வகையில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

1885 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் திகதி வெசாக் தினத்தை வர்த்தமானி அறிவித்தல் மூலம் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டதையடுத்து, பௌத்த பாதுகாப்பு சபை வெசாக் பண்டிகையை சிறப்பாக கொண்டாட பத்து பேர் கொண்ட குழுவை நியமித்தது. ஹிக்கடுவை ஸ்ரீ சுமங்கல தேரர், மீகெட்டுவத்தை குணானந்த தேரர் மற்றும் டொன் கரோலிஸ் ஹேவாவிதாரண, ஏ.பி.தர்மகுணவர்தன வில்லியம் டி அப்ரோவ், பி. டி. குணவர்தன, சார்ள்ஸ் டி சில்வா, என்.எஸ்.பெர்னாண்டோ, பீற்றர் டி அப்ரேவ், வில்லியம் பெர்னாண்டோ உள்ளிட்டோர் இதில் சம்பந்தப்பட்டிருந்தனர்.

அந்தக் குழுவில் 1885 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி காலை கொழும்பு கொட்டாஞ்சேனை தீப துத்தாராமவில் பௌத்தக் கொடியை ஏற்றுவது என தீர்மானிக்கப்பட்டது. கொட்டாஞ்சேனையில் உயர்த்தப்பட்ட இந்த பௌத்தக் கொடி சுமார் 15 தசாப்தங்களாக இன்னும் உலகம் முழுவதும் பறந்து கொண்டிருக்கிறது என்பது ஒரு முக்கியமான விடயமாகும். இந்தக் குழுவின் தீர்மானங்கள் அவ்வாறே நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், திரு. ஓல்கொட் அவர்களின் ஆலோசனையின் பேரில் பௌத்த கொடி உருவாக்கப்பட்டது.

பௌத்தத்தின் அகிம்சையையும் ஆழத்தையும் நாட்டிற்கும் உலகிற்கும் விளக்கி முழு நாட்டையும் முறைப்படுத்திய மீகெட்டுவத்த குணானந்த நாயக்க தேரர் இதற்கு தலைமைத்துவத்தை வழங்கினார். அவரது திருவுருவச் சிலை அமைக்கப்பட்டுள்ள இந்த விகாரை நம் நாட்டு மக்களுக்கும் வளரும் தலைமுறைக்கும் தனித்துவம் மிக்தாகும்.

பல நூற்றாண்டுகளுக்கும் முற்பட்ட இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான உறவு, பெளத்த சாசனம் தாபிக்கப்பட்டதிலிருந்து சியாம் மகா நிகாய, அமரபுர நிகாய மற்றும் ராமன்ய நிகாய வரை நீண்டு செல்கிறது. தேரவாத பௌத்த நாடுகளுடன் ஏற்படுத்தப்பட்ட வலையமைப்பின் விளைவாக, சியம் நாட்டு இளவரசர் இந்த விகாரையில் துறவியாகக் கழித்த காலம் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும்.

பௌத்தக் கொடியை மேலும் வலுப்படுத்துவதற்கு சியம் நாடு காட்டும் விசேட அர்ப்பணிப்பையும் தீபத்துத்தமாராம விகாரையானது எமது நாட்டின் பௌத்த வரலாற்றிற்கு மட்டுமன்றி பௌத்த நிலையமாகத் திகழ்வதையும் மீண்டும் நினைவுகூர்கிறேன்.

பல பாடசாலை மாணவர்களுக்கு கல்வியை வழங்கிய குமார வித்தியாலயமும் இந்த வளாகத்தில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். அநகாரிக தர்மபால போன்ற எமது நாட்டிலுள்ள அனைத்து தேசிய மற்றும் பௌத்தத் தலைவர்களின் மத்திய நிலையமாகவும், நாட்டில் எழுச்சியை ஏற்படுத்திய சங்கைக்குரிய சரணாகர மகா சங்கராஜ தேரர் வருகை தந்த இந்த விகாரையானது கல்வி, பௌத்த கல்வி மற்றும் கலாசாரம் ஆகியவற்றை நாட்டு மக்களுக்கு வழங்குவதற்கு ஒரு சவாலான காலகட்டத்தை வெற்றிகொள்வதற்கு பலமாக அமைந்திருந்தது.

அந்த மகத்தான பயனை முழு நாட்டிற்கும் வழங்க முடிந்த எங்கள் ஆரம்பகால முன்னோடிகள் அனைவரையும் நாங்கள் மதிக்கிறோம்.

இதனை ஒரு புண்ணிய பூமியாக பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுப்போம் என அரச்சாங்கத்தின் சார்பில் உறுதியளிக்கிறேன்.

ஸ்ரீலங்கா அமரபுர மகா நிகாயவின் சம்புத்த சாசனோதய மகா சங்கத்தின் மகா நாயக்க தேரர் உட்பட மகா சங்கத்தினர், தாய்லாந்து தூதுவர் பொஜ் ஹன் போன், புத்தசாசன அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, இராஜாங்க அமைச்சர்களான அசோக பிரியந்த, ஜானக வக்கும்புர, பாராளுமன்ற உறுப்பினர்களான யதாமினி குணவர்தன, சரத் வீரசேகர, உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.