பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும் Daraz குழுமத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி பிஜாக் மிகெல்ஸன்(Bjarke Mikkelson)தலைமையிலான Daraz குழுவிற்கும் இடையிலான சந்திப்பு 23.08.2022 அன்று கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, Daraz பிரதம செயற்பாட்டு அதிகாரி தர்ஷிகா அத்தநாயக்க, நிர்வாகம், கொள்வனவு மற்றும் அரசாங்க உறவுகளின் தலைவர் மலித் ரணதேவ ஆகியோர் கலந்துகொண்டனர்.