2024.06.30 அன்று கிருலப்பனை புஷ்பாராம விகாரையின் பெரஹர நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள், புனித கலசத்தை யானை மீது வைத்து ஊர்வலத்தை ஆரம்பித்து வைத்தார்.

கிருலப்பனை புஷ்பாராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய எல்கடுவ நாகித தேரரின் வழிகாட்டலின் கீழ், அரச அனுசரணையுடன் நடைபெறும் இந்த மஹா பெரஹர கொழும்பு பெரஹர விழாக்களில் முக்கிய இடத்தைப் பெறுகிறது.

மஹா சங்கத்தினர், பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, கிருலப்பனை வர்த்தக சமூகம் மற்றும் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு