சர்வதேச தாய் மொழித் தினமானது பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களது தலைமையில் இடம்பெற்றது...

சர்வதேச தாய் மொழித் தினமானது (International Mother Language Day) பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களது தலைமையில், இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் 2023.02.21 ஆந் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடாத்தப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 21ஆந் திகதியில் வருகின்ற சர்வதேச தாய் மொழித் தினமானது அமைதியை ஏற்படுத்துதல், பல்மொழி பயன்பாட்டை மேம்படுத்துதல், உலகளாவிய ரீதியில் காணப்படும் தாய் மொழிகளைப் பாதுகாத்தல் போன்ற நோக்கங்களை மையப்படுத்தியதாக நடாத்தப்படுகிறது.

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலயம், கல்வி அமைச்சு, இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மற்றும் இலங்கையின் சாரணர் இயக்கம் என்பன இணைந்து இம்முறை சர்வதேச தாய் மொழித் தினத்தை ஒழுங்கு செய்திருந்தது.

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் டரேக் அரிபுல் இஸ்லாம் (Tareq Ariful Islam) உள்ளிட்ட பல நாடுகளது தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்த பிரதிநிதி சரத் தாஸ், இராஜாங்க அமைச்சர்களான சுரேன் இராகவன், தாரக பாலசூரிய, பிரதமரது செயலாளர் அநுர திசாநாயக்க, கல்வி அமைச்சின் செயலாளர் நிகால் ரணசிங்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.