எமது அரசியலில் வன்முறை இல்லை. வன்முறையற்ற அரசியல் வெற்றிக்கான அர்ப்பணிப்புடன் அரசாங்கம் இந்த சவாலை ஏற்றுக்கொண்டது. - பிரதமர் தினேஷ் குணவர்தன

கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் மற்றும் சிறிய அளவிலான கோழிப்பண்ணை உரிமையாளர்களை மேம்படுத்தும் நோக்கில் முட்டை அடைக்காப்பக இயந்திரங்களை விநியோகிக்கும் நிகழ்வு இன்று 2024.04.07 பிலியந்தலை, மாவித்தர மற்றும் ஹோமாகம வில்பிரட் சேனாநாயக்க விளையாட்டரங்கில் இடம்பெற்றது இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு முழு நாட்டு மக்களும் மிகவும் தைரியமாக இருந்தனர். எம் வாழ்நாளில் நாடு இப்படி ஒரு நெருக்கடியை சந்தித்ததாக நாம் கேள்விப்பட்டதே இல்லை. இதற்கு முன் இரண்டாம் உலகப் போரின் போது எமது பெரியவர்கள் இந்த நிலையை எதிர்கொண்டதாக கேள்விப்பட்டிருக்கிறோம். அப்போது, எமது விவசாயிகள் அப்போதிருந்த தோட்டங்களை உணவு உற்பத்திக்கு உட்படுத்தி நெருக்கடியை வெற்றிகொண்டனர்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், கொரியாவைப் பற்றி நிறைய கேள்விப்பட்டோம். இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னரும் கொரியா மீது குண்டுவீச்சு தொடர்ந்தது. கொரியா வடக்கு மற்றும் தெற்கு என இரு நாடுகளாக பிரிக்கப்பட்டது. ஆனால் கொரிய மக்கள் கிராமிய உணவு உற்பத்திக்கு முன்னுரிமை அளித்து நாட்டை உணவால் வளப்படுத்தியது மட்டுமின்றி உபரி உற்பத்தி செய்யும் நாடாகவும் ஆனார்கள். புதிய அறிவைச் சேர்ப்பதன் மூலம், முன்னேறிய தொழில்மயமான நாடுகளில் ஒன்றாக ஆனது மட்டுமன்றி, கொரியா தனது நாட்டை அந்நியச் செலாவணி உபரி நாடாக மாற்றியமைத்ததால், சர்வதேசப் பொருளாதார நெருக்கடிகளை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் வலிமை அவர்களிடம் உள்ளது.

கிராமிய வருமான இடைவெளியைக் குறைத்து குறைந்த வருமானம் பெறுபவர்கள் அனைவரும் நல்ல வருமானம் பெறும் வகையில் ஒரு திட்டம் ஆரம்பிக்கப்பட வேண்டும். மேலும், அவர்கள் புதிய தலைமுறையின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் முறை, கைத்தொழில்துறை வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தி முன்னேற்றமடைந்தது மட்டுமின்றி, எம்மைப் போன்ற நாடுகளுக்கு இன்னும் ஆதரவளித்து வருகின்றனர். இன்னும் கடன் கொடுக்கிறார்கள். இன்னும் உதவி செய்கிறார்கள். இதன் விளைவாக, எம் நாட்டிற்கு இந்த முட்டை அடைக்காப்பகங்கள் கிடைத்தன. இந்த வேலைத்திட்டம் இலங்கையின் ஒவ்வொரு தொகுதியிலும் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

நாம் எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியின் போது அரசியல் பேதங்களைப் பார்க்காமல் எமது நாட்டு மக்களைப் பாதுகாத்து நாட்டை முன்னோக்கிக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதில் நாம் அனைவரும் கைகோர்க்க வேண்டும். எமது அரசியலில் வன்முறை இல்லை. அகிம்சை அரசியலில் வெற்றி பெறுவதன் மூலமே மனித சமூகத்தை அமைதியான நிலையில் வாழக்கூடிய அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும். அதற்கான அர்ப்பணிப்புடன் தான் இந்த சவாலை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. பல்வேறு அச்சுறுத்தல்களின் மத்தியில் அதனை நிரூபித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அமைச்சரவையும் இணைந்து நாட்டின் அகிம்சை அடிப்படையிலான ஜனநாயக அரசியலுக்கு நாட்டை மீட்டெடுக்கும் திறனை நிரூபித்துள்ளனர்.

அதைச் செய்ய முடியாது என்று பலரும் பல கோணங்களில் பிரச்சாரம் செய்தனர். ஆனால் அந்த பிரச்சாரங்கள் அனைத்தும் தோல்வியடைந்தன. இதுவரை நாம் நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் சட்டத்தின் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியுள்ளோம். அன்று ஒருவார காலமாக நீடித்த வன்முறைகளுக்கு மாதக்கணக்கில் செல்ல அனுமதித்திருந்தால், அதன்நிலைமைகள் என்னவாக இருக்கும்? உலக சமூகத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம், எமது கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டு, புதிய முதலீடுகளை கொண்டுவரக்கூடிய புதிய வழிகளுடன் நாடு முன்னேறி வருகிறது.

அமைச்சர் பந்துல குணவர்தன, முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, கொழும்பு மாவட்ட செயலாளர் கே. ஜி. விஜேசிறி, கெஸ்பேவ பிரதேச செயலாளர் கே. பி.பிரேமதாச, ஹோமாகம பிரதேச செயலாளர் பி. எ. டி. சிந்தக உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு