எமது மக்களின் பெறுமதிவாய்ந்த அர்ப்பணிப்புகளை மீண்டும் மீண்டும் நினைவூட்டாது விட்டால் அந்த போராட்டங்களும் பாரம்பரியங்களும் வரலாற்றிலிருந்து மறைந்துவிடும் - பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன

கொழும்பு இலங்கை மன்றத்தில் நடைபெற்ற தேசிய மாவீரர் பிலிப் குணவர்தனவின் 52வது நினைவு தின நிகழ்வில் (2024.03.31) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் யாதாமினி குணவர்தன,

எமது நாட்டில் மட்டுமன்றி பல கண்டங்களைச் சேர்ந்த சாதாரண மக்களின் வெற்றிகளுக்காக பல தியாகங்களை செய்த நாட்டின் தேசிய மாவீரர் என இன்றும் மரியாதையுடன் நினைவுகூரப்படும் பிலிப் குணவர்தன அவர்கள், உயர்கல்வி பெறுவதற்கான பாதையை தெரிவு செய்யும் போது, ஏகாதிபத்தியத்தின் தடைகளைத் தகர்த்து, அதை உடைத்து, முன்னோக்கிச் செல்லக்கூடிய எதிர்கால இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளக் கூடிய ஒரு இடத்திற்கு அவரை அனுப்பிவைக்குமாறு பிலிப் குணவர்தனவின் தந்தைக்கு அனகாரிக தர்மபால அறிவுரை வழங்கினார்.

அதன்படி, பிலிப் குணவர்தன விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட பேராசிரியர் ஸ்காட் நியரிங் உடன் இணைந்து மெக்சிகோவில் இரண்டாம் புரட்சியை ஆதரிப்பதில் இளம் வயதிலேயே அனுபவத்தைப் பெற்றார். ஆனால் அவரது புரட்சிப் போராட்டங்கள் அத்துடன் முடிந்துவிடவில்லை. அவர் வட அமெரிக்கக் கண்டத்தில் நடந்த போராட்டங்களை ஆதரித்தபோது, பிரிட்டிஷ் உளவுத்துறையான ஸ்காட்லாந்துயார்டு அவரைத் பின்தொடர்ந்தது. பிலிப் குணவர்தன இறந்து 40 வருடங்கள் கழித்து அந்த அறிக்கை வெளியிடப்பட்டது. ஏகாதிபத்தியவாதிகளைச் சந்தித்து சவால் விடுத்து, ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள எம் நாடு போன்ற காலனித்துவ நாடுகளின் மக்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகளுக்கான போராட்டத்தை எவ்வாறு முன்னெடுத்துச் சென்றனர் என்பது குறித்த தகவல்கள் அதனைவிடவும் அதிகம் அந்த அறிக்கையில் உள்ளன. பிலிப் குணவர்தன எம்மை போன்ற நாடுகளின் மக்களின் தேவைகளை முன்னிலைப்படுத்த அச்சமின்றி போராடினார்.

மேலும், ஸ்பெயினில் முதல் புரட்சிப் போராட்டத்தில் முன்னணியில் இருந்து முதலாவது குடியரசை அமைப்பதில் பங்கேற்றார் என்பதும் இந்த ரகசிய தகவலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கிராமத்தின் விகாரையிலும் பொரலுகொட கனிஷ்ட பாடசாலையிலும் தாய்மொழியில் கல்வி கற்றாலும் ஸ்பானிய, பிரஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்று அந்த மொழிகளின் வெற்றிகளுக்குத் துணையாகப் பல அனுபவச் செல்வங்களைச் சேகரித்தார்.

எமது நாட்டில் சூர்யகாந்தி பூ இயக்கத்தைத் தொடங்கி இடதுசாரித் தலைவர்களுடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தின் பிரமாண்டமான தொடக்கத்தைப் பெறச் செய்தார். 1936 ஆம் ஆண்டு தேர்தலில் களனி மிடியாவதவின் அடுத்த கோணத்திலிருந்து கொழும்பு பாலத்துரை வரை பரந்து விரிந்திருந்த அவிசாவளை தொகுதியில் போட்டியிட்டு இளம் பாராளுமன்ற உறுப்பினராக அரச சபைக்கு தெரிவானார்.

ஆங்கிலேயர்கள் கடற்கொள்ளையர்களாக வந்ததால் இந்த நாட்டைச் சொந்தமாக்கி ஆள உங்களுக்கு உரிமை இல்லை. உடனடியாக திரும்பிச் செல்லுங்கள் என்று அரச சபையில் முதலில் கூறியவர் பிலிப் குணவர்தன அவர்கள் தான். அதனால்தான் அவர் பின்பற்றிய அரசியல் பயணத்தில் அடிக்கடி தடைகளை சந்திக்கவேண்டியதாயிற்று. தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையை உடைத்து வெளியேறிய அவர்கள் இந்திய தீபகற்பத்தின் தலைவர்களுடன் கைகோர்த்து பலம்பெற்றார்கள்.

நமது நாட்டின் சுதந்திரப் போராட்டத்திலும், பிராந்திய மக்களின் சுதந்திரத்திற்காகவும் பிலிப் குணவர்தன பெரும் பங்காற்றினார். ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தை முன்னின்று நடத்தியதன் மூலம், எமது ஆசிய நாடுகளின் சுதந்திரத்திற்காக மாபெரும் போராட்டத்தை நடத்தினார்.

அந்த நிகழ்வுகளைப் பற்றி நினைவூட்டுவது எனது கடமை. இதைச் செய்யாவிட்டால், எமது நாட்டின் விலைமதிப்பற்ற தியாகங்கள், போராட்டங்கள், எமது மக்களின் பாரம்பரியம் ஆகியவை வரலாற்றில் இருந்து அழிந்து மறைந்து போகலாம்.

சுதந்திரத்திற்குப் பின்னர், அவர் தேசியவாத இயக்கத்தை வழிநடத்தினார். நமது நாட்டின் பொது மக்களுடன் சேர்ந்து, அவர்கள் தங்கள் சிறந்த படைப்பாற்றல் மூலம் தேசிய பொருளாதாரத்தை உயர்த்தக்கூடிய தேசிய வர்த்தகங்களை உருவாக்க முடியும் என்பதை அவர் நிரூபிக்க விரும்பினார். போக்குவரத்துத் துறை மற்றும் துறைமுகம் மக்கள் மயப்படுத்தப்பட்டமை பற்றி விசேடமாகக் குறிப்பிட வேண்டும். அந்த நேரத்தில் உலகின் 126 வது இடத்திலிருந்த துறைமுகம், தேசியமயமாக்கல் இயக்கத்திற்கு 25 ஆண்டுகளுக்குப் பின்னர், உலகில் 26 வது இடத்தைப் பிடித்தது. தேசியவாத இயக்கம் எம் நாட்டு மக்களின் பலத்தை எடுத்துக்காட்டியது. அவ்வாறே, மண்வெட்டியை எடுத்துக்கொண்டு இந்த பூமியில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு ஆசியாவின் கிழக்கின் தானியக் களஞ்சியமாக மாற்றிய நாட்டு விவசாயிகளுக்கு விவசாய நடவடிக்கைகளைத் தொடரும் உரிமையில் சிக்கல் ஏற்பட்டது. அவர்களுக்கு வங்கி அமைப்பில் இருந்து எந்த ஆதரவும் இல்லை. எம் நாட்டின் சாதாரண விவசாயிகளுக்கு கடன்பெறுவதற்கென ஒரு வங்கி இல்லாத காலம் இருந்தது. அப்போது, விசேடமாக சில பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, வங்கி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நாட்டு மக்களின் இதயத் துடிப்பை அறியும் முதலாவது தேசிய வங்கியை உருவாக்கும் சட்டமூலத்தை பிலிப் குணவர்தன அவர்களே பாராளுமன்றத்தில் கொண்டு வந்தார். மக்கள் வங்கிச் சட்டம் என்று சொன்னாலும் முதலாவது சட்டம் கூட்டுறவு அபிவிருத்தி வங்கிச் சட்டமாகும். இந்த வங்கிச் சட்டம், எமது நாட்டின் சாதாரண மக்கள் உலகத்துடன் வர்த்தகம் செய்யவும், தங்கள் தொழிலை மேம்படுத்தவும், நம் நாட்டின் நலிவடைந்த பொருளாதாரத்தில் இருந்து வெளிவரவும் வாய்ப்பை ஏற்படுத்திய செயல்.

அபிவிருத்தி இலக்கை அடைய நாம் புதிதாக சிந்திக்க வேண்டும். ஆக்கப்பூர்வமாக சிந்திப்பதன் மூலம் எமது நாட்டின் பொது மக்களை அணிதிரட்டும் பயணத்திற்கு இந்த விடயங்கள் பங்களிக்க முடியும்.

பேராசிரியர் ரணில் சேனாநாயக்க,

பிலிப் குணவர்தன அவர்கள், சமூகத்தை ஒரு தேசமாக உயர்த்தும் அபிவிருத்தி இலக்காக இருந்த காலகட்டத்தில் பிறந்த ஒரு தலைவர். அப்போது, பொருளாதார அபிவிருத்தி அல்லது நாம் சம்பாதிக்கக்கூடிய அல்லது கடன் வாங்கும் பணத்திற்கு பதிலாக, சமூக நல்வாழ்வை இலக்காகக் கொண்டிருந்தது. பிலிப் குணவர்தன இதனை எமக்குக் காட்டினார்.

குத்தகை விவசாயிகளுக்கு நிவாரணம் அளித்த நெற் காணிகள் மசோதாவை துவக்கியவர்களில் ஒருவராகவும் அவர் நினைவுகூரப்படுகிறார். நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும், சுதந்திரத்தை பாதுகாப்பதற்கும், நாட்டு மக்களுக்கு சேவை செய்வதற்கும் தயாராக இருக்கும் எந்தவொரு குழுவுடன் இணைந்து செயற்படுவேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். அது எந்த குழுவாகவும் இருக்கலாம்.

சங்கைக்குரிய இத்தேபானே தம்மாலங்கார தேரர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, குடும்ப உறவினர்களான பிரசன்ன குணவர்தன, லக்மலீ குணவர்தன, முன்னாள் சபாநாயகர்களான சமல் ராஜபக்ஷ, கரு ஜயசூரிய, பசில் ராஜபக்ஷ, ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பல நாடுகளின் தூதுவர்கள், கல்விமான்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு