புத்த சாசன நிதியம் கூடப்பட்டது.

பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களது தலைமையில், புத்தசாசன மற்றும் சமய அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க அவர்களதும், எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களதும் பங்கேற்பில், புத்த சாசன நிதியத்தின் அங்கத்தவர்கள் 2023.03.24ஆந் திகதி கொழும்பு பிரதமர் அலுவலகத்தில் கூடினர்.

இதன்போது, புத்த சாசன நிதியத்தின் தற்போதைய நிலைமைகள், பின்னூட்டல்கள் மற்றும் முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அவ்வாறே, புத்த சாசனத்தினதும், பிக்குகளதும், விகாரைகள் உள்ளிட்ட பௌத்த மதத்தலங்களினதும் முன்னேற்றம் தொடர்பிலான எதிர்கால பிரேரணைகளும் கலந்துரையாடப்பட்டன.

பிரதமரது செயலாளர் அநுர திசாநாயக்க, புத்தசாசன மற்றும் சமய அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன, பதில்கடமை நம்பிக்கைப் பொறுப்பாளரான எம்.நாலிகா, பொது முயற்சியாண்மை திணைக்களத்தின் பணிப்பாளர் ஆர்.ஏ.எல்.உதயகுமார ஆகிய குழு அங்கத்தவர்கள் இதன்போது கலந்துகொண்டனர்.