புத்தரின் முகலான் பிரதான சீடர்களான சரியுத் புனித நினைவுச்சின்னங்கள் காட்சிப்படுத்தும் நிகழ்வு பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பங்கேற்புடன் மஹா போதி ஆலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இவ்வருட வெசாக் பண்டிகையை முன்னிட்டு மஹா போதி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சரியுத் முகலன் அக்ரஸ்ராவக்க மகா விஹாரையில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள புத்த பகவானின் பிரதம சீடர்களின் புனித சின்னங்களை காட்சிப்படுத்தும் நிகழ்வு நேற்று (05.05.2023) பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களின் தலைமையில் ஆரம்பமானது.

இந்நிகழ்வில் அக்ரஸ்ராவக்க விகாராதிபதி, மஹா போதி சங்கத்தின் தலைவர் பானகல உபதிஸ்ஸ தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, பௌத்த சாசன அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன உட்பட பெருமலவான பக்தர்கள் கலந்துகொண்டனர்