பொசன் நோன்மதி தினச் செய்தி

தூய பௌத்த தர்மத்தை இலங்கைக்குக் கொண்டு வந்த மஹிந்த தேரரின் வருகையை நினைவுகூரும் பொசன் நோன்மதித் தினம் இலங்கை பௌத்தர்களுக்கு ஒரு விசேட தினமாகும்.

விவசாய பொருளாதாரத்தினால் போஷிக்கப்பட்ட இலங்கைச் சமூகம் பௌத்த தர்மத்தின் செய்தியுடன் உண்மையான தத்துவத்தின் மூலம் அறிவியல் ரீதியாக ஒளிபெற்றது.

அன்று சுல்லஹத்தி பதோபம சூத்ர உபதேசத்தில் மஹிந்த தேரர் உபதேசித்தது போல் மிகுந்த நிதானத்துடன் செயற்படுவது அனைவரினதும் கடமையாகும்.

உண்மையான தர்மத்தை எந்த வகையிலும் நிராகரிக்க முடியாது. உண்மையான தர்மத்தை உணர்ந்தவர் அனைத்துவிதமான பேதங்களையும் கடந்து பௌத்தத்தின் சாரத்தை தேடிச் செல்வார். எதிர்மறையான நிகழ்வுகளைப் உளச்சமநிலையுடன் புறக்கணித்து, உண்மையான பௌத்த தத்துவத்தைக் கொண்டு எமது வாழ்க்கையை ஒளிமயமாக்குவோம்.

தூரநோக்குடன் சிந்தித்து செயற்பட வேண்டிய இது போன்ற காலகட்டத்தில், உன்னதமான நற்பண்புகளுடன் கூடிய சமூகத்திற்காக இந்த புனித பொசன் பௌர்ணமி தினத்தில் நாம் ஒன்றுபடுவோம்.


தினேஷ் குணவர்தன
பிரதமர்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு
2023 ஜூன் 02