ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்களுடன் பிரதமர் சந்திப்பு

பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளின் தூதுவர்களை இன்று (டிசம்பர் 7) அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர், டெனிஸ் சிபி, ஜெர்மனி தூதுவர், ஹோல்கர் சீபர்ட், நெதர்லாந்தின் தூதுவர், போனி ஹோர்பாக், பிரான்ஸ் தூதுவர், ஜீன்-பிரான்கோயிஸ் பெக்டெட் மற்றும் ரோமானிய தூதரகத்தின் பொறுப்பாளர் விக்டர் டியுட்ஜியா உள்ளிட்டோர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர். இந்த சந்திப்பில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்கவும் கலந்துகொண்டார்