பிரதமர் தினேஷ் குணவர்தனவின் புத்தாண்டு வாழ்த்து

“அனைத்துவிதமான சவால்களையும் வெற்றிகொண்டு சிறந்ததோர் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.

குறிப்பாக உணவுப் பாதுகாப்பு மற்றும் கிராமியப் பொருளாதார மறுமலர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து, ஏனைய அனைத்துத் துறைகளுக்குமான அபிவிருத்தி முயற்சிகளில் செயற்திறமாகப் பணியாற்றுவோம்.

மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கின்ற தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான மூலோபாயங்களுடன் செயற்பட்டு, மலரும் புத்தாண்டில் வளமானதொரு தேசத்தை கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்."