நமது நாடு உலகிற்கு அளிக்கும் மிகப் பெரிய கொடை பௌத்த தர்மமாகும் .

சீனாவின் வெள்ளைக்குதிரை (White Horse) விகாரையினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட புத்தர் சிலையை கையேற்கும் நிகழ்வு , இன்று (2024.08.22) பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையிலுள்ள பெளத்த நிலையத்தில் இடம்பெற்றது.

கொழும்பு பெளத்த நிலையத்தின் தலைவர் எல்லே குணவன்ச தேரர் இங்கு உரையாற்றினார்.

இன்று இலங்கைக்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். நீங்கள் அனைவரும் கூடியிருக்கும் இந்த இடம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம். சுமார் 45 வருடங்களாக இந்த இடத்துடன் நீண்டகால உறவைக் கொண்ட ஒரு பிரதமர் இருக்கிறார். இவ்விடத்தை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் தேசிய, சமய, சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டு இந்நாட்டில் பௌத்த மறுமலர்ச்சியை உருவாக்குவதில் அவர் ஈடுபட்டார்.

குறிப்பாக தினேஷ் குணவர்தன அவர்கள் பிரதமராக பதவியேற்ற பின்னர், இந்த நாட்டில் பௌத்தத்தின் மறுமலர்ச்சி குறித்து கலந்துரையாடவும் ஆதரவளிக்கவும் அவ்வப்போது செயற்பட்டு வருகின்றார். இங்கு வந்து வழிபட வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பௌத்தர்களுக்காக அதை காட்சிப்படுத்த வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.

இந்த நிகழ்ச்சியை பிரதம் முன்னின்று நடத்தியதன் விளைவாக, ஸ்வேத அஸ்வ விகாரையின் தலைமை தேரர் உட்பட விகாரையின் நிர்வாகிகளும், சீன அரசாங்கமும் எங்களுக்கு ஆதரவளித்தனர்.

நம் நாடு உலகிற்கு அளிக்கும் மிகப் பெரிய கொடை தேரவாத பௌத்தம். இன்று உலகம் முழுவதும் பொருளாதாரப் போர் நடந்து வருகிறது. இந்தப் பொருளாதாரப் போரில் முழு உலகமும் ஈடுபட்டுள்ளது. ஆனால் உலகில் ஆறுதல், மகிழ்ச்சி, கருணை, அன்பு ஆகியவற்றைப் பரப்பும் திறன் குறிப்பாக பௌத்த விகாரைகளின் தேரர்களுக்கு உள்ளது.

தேரவாத பௌத்தம் எமது தேரர்களால் பரப்பப்பட்டது. சீனாவில் உள்ள ஸ்வேத அஸ்வ விகாரை மற்றும் பெளத்த நிலையத்துடன் இணைந்து, உலகில் தர்மத்தைப் பரப்புவதற்கு முன்னுரிமை வழங்குவோம்.

இங்கு கருத்துரை வழங்கிய சீன தூதுவர் சி ஷென்ஹாங் -

இந்த முக்கியமான சந்தர்ப்பம் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நீண்டகால நட்புறவுக்கு வழிவகுக்கும். சீனாவின் முதலாவது மற்றும் முதன்மையான விகாரையான ஸ்வேத அஸ்வ விகாரையினால் இந்த சிலை அன்பளிப்பு செய்யப்படுகிறது. பண்டைய நாகரிகங்களின் கலவை மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்று எமது ஜனாதிபதி ஜி ஜின்பிங் கூறினார். இது பௌத்த நட்பை மேம்படுத்துவதோடு சிறந்த நட்பை உறுதிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. புத்த மதத்தை உலகம் முழுவதும் பரப்பும் விரிவான திட்டத்தின்படி தாய்லாந்து, இந்தோனேசியா, வியட்நாம், மியான்மர், இந்தியா, கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகளில் சிலைகள் நிறுவப்பட உள்ளன.

இந்நிகழ்வில் சங்கைக்குரிய யின் லீ, வெள்ளைக் குதிரை விகாரையின் விகாராதிபதி, சங்கைக்குரிய மியாவோ யே, வெள்ளைக் குதிரை விகாரையின் பணியாளர்கள், சங்கைக்குரிய குவான் ஷான், சீனத் தூதுவர் சி ஷென்ஹாங் மற்றும் திருமதி ஷென்ஹாங், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிப் பணிப்பாளர் பாங் மின்சின் லுவோயாங் நகர சபை குழுவின் முன்னணி திணைக்களம், காவோ ஷென்லி, லுயோயாங் இன மற்றும் மத விவகாரப் பணியகத்தின் பணிப்பாளர், பாய் ஷிபின், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் லுயோயாங் நகராட்சிக் குழுவின் வெளியுறவு ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர், ஹு சுவான்யான், லுயோயாங் இன மற்றும் மத விவகார மையத்தின் பணிப்பாளர் மற்றும் லுயோயாங் புத்த சங்கத்தின் பொதுச் செயலர் ஜாங். சுவான்யு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் Luoyang நகரசபை குழுவின் வெளிவிவகார ஆணைக்குழு அலுவலகத்தின் சர்வதேச பரிவர்த்தனை பிரிவின் பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு