அடிமைத் தீவு விடுதலை பெறுகிறது.....

ஆங்கில மொழியில் Slave Island என அறியப்பட்ட கொம்பனித்தெரு என்ற பெயர், சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் ‘கொம்பனித்தெரு’ எனப் பயன்படுத்துவதற்கு இயைபான வகையில் உரிய திருத்தங்களை மேற்கொள்வதற்கு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்குமாறு, பிரதமரின் செயலாளர் அநுர திசாநாயக்க அவர்கள் அரசாங்க நிருவாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களின் ஆலோசனையின்பேரில் எழுபத்தைந்தாவது சுதந்திர தினத்தையொட்டி எடுக்கப்பட்டுள்ள இந்த தீர்மானம் தொடர்பில், தபால்மா அதிபர் மற்றும் கொழும்பு மாநகரசபையின் நகர ஆணையாளர் என்போர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் ‘கொம்பனித்தெரு’ எனப் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் காலணித்துவ ஆட்சிக் காலத்தின்போது அப்பிரதேசத்தை அழைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட Slave Island என்ற பெயர் இற்றைவரை ஆங்கில மொழியில் பயன்படுத்தப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.