இலட்சக்கணக்கான உழைக்கும் மக்கள் தமது உரிமைகள் பற்றி பேசும்போது காமனி ஜயசூரிய அவர்களை மறந்துவிட முடியாது... - பிரதமர் தினேஷ் குணவர்தன

ஹோமாகம, மீகொட மத்திய மகா வித்தியாலயத்திற்கு காமனி ஜயசூரிய மத்திய மகா வித்தியாலயம் என பெயர் சூட்டும் நிகழ்வில் இன்று (2024.04.30) கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு மேலும் உரையாற்றிய பிரதமர்-

காமனி ஜயசூரிய அவர்களின் நூற்றாண்டை நினைவுகூர்ந்தும் பாடசாலையின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டும் பாடசாலைக்கு அவரது பெயரை சூட்டுவது விசேட நிகழ்வாகும். இதன் மூலம், பாடசாலை பிள்ளைகளுக்கு சமூகத்திற்கு மிகுந்த நன்றியை தெரிவிக்க கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

காமனி ஜயசூரியவை பற்றி நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும். எமது மதிப்பிற்குரிய தேசிய வீரராக வரக்கூடிய முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர். அனகாரிக தர்மபால அவரது தலைமுறையின் தேசிய மறுமலர்ச்சிக்கான தலைமைத்துவத்தின் நூற்றாண்டை உருவாக்கினார். பொரலுகொட ராலஹாமி எனது தாத்தாவின் உறவினர்களின் தலைமுறையில் காமனி ஜயசூரியவின் உறவினர்கள் இணைந்திருந்தனர். அதனால்தான் தேசிய மாவீரர்களின் பிரதான போராட்டங்களின் போது இவர்கள் இணைந்து செயற்பட்டார்கள்.

இவ்வாறான பின்னணியைக் கொண்ட ஹேவாகம்கோரலயாவிற்கு பிற்காலத்தில் பிலிப் குணவர்தன 1936 இல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இந்த தேசிய இயக்கத்தின் காரணமாகவே, கல்விக்கு சாத்தியமான எல்லா பலத்தையும் கொடுக்க ஒன்றுபட்டனர். பெர்னாட் ஜயசூரிய காமனி ஜயசூரியவின் அன்புத் தந்தை ஆவார். காமனி ஜயசூரிய நீண்ட அரசியல் பாரம்பரியத்தையும் தேசிய பாரம்பரியத்தையும் கொண்டிருந்தார்.

எமது நாட்டின் கல்விக்கு தனித்துவமான பங்களிப்பாக புதிய கல்வி முறை உருவாக்கப்பட்டு, புதிய துறைகளில் பலம் பெற்ற புதிய தலைமுறை உயர்நிலைப் பாடசாலைகளுக்குச் சென்று பல்கலைக்கழகத்திற்குச் சென்று, குறிப்பாக தொழில்நுட்பத் துறையின் முன்னேற்றகரமான ஒரு காலகட்டத்தை நாம் கடந்து வந்துள்ளோம்.

அக்காலத்தில் கல்விப் பிரச்சனைகளைப் பார்க்கிலும் பல அரசியல் மோதல்கள் இருந்தன. எனினும் அப்போது இப்பிரதேச மக்களின் ஆதரவுடனும் பெற்றோரின் ஆதரவுடனும் பாடசாலையின் பணிகளைத் தொடர முடிந்தது.

அப்போது காமனி ஜயசூரிய அவர்கள் இளைஞராக இருந்தபோது அரசியலுக்கு அப்பாற்பட்டு அந்தக் கல்வி எழுச்சிகளுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணத்தை வழங்க முன்வந்தார். எனவே, இன்றைய சமுதாயத்திற்கு சிறப்பான தியாகங்களை எடுத்துக்காட்டினார். காமனி ஜயசூரியவை கல்வித் துறையினால் மறந்துவிட முடியாது. கல்வித் துறைக்குப் பொறுப்பான பல முக்கியப் பொறுப்புகளை வகித்த அவர், சுகாதாரத் துறை மற்றும் விவசாயத் துறைகளிலும் பொறுப்புகளை வகித்தார்.

எண்பதுகளின் மாபெரும் வேலைநிறுத்தம் உங்களுக்கு நினைவிருக்கலாம். அனைத்து அரச ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அப்போது எண்பதாயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். நாளை முதல் பணிக்கு வரக்கூடாது என்ற அறிவிப்பு மட்டுமே வெளியானது. ஆனால் அமைச்சர் காமனி ஜயசூரிய தனக்கு கீழ் இருந்த அமைச்சு மற்றும் கூட்டுத்தாபனங்களில் எவரையும் பதவி நீக்கம் செய்யவில்லை.

நாளை சர்வதேச தொழிலாளர் தினம். நாளை இலட்சக்கணக்கான உழைக்கும் மக்கள் தமது உரிமைகளை பற்றி பேசும் போது, அன்றைய தினம் அவர்களின் உரிமைகளை காமனி ஜயசூரிய அமைச்சராக இருந்து பாதுகாத்தார். நாட்டின் அரசியலின் தேசிய பணி தொடர்பாக காமனி ஜயசூரியவின் மிகவும் தனித்துவமான மற்றும் முன்மாதிரியான கொள்கை இதுவாகும். காமனி ஜயசூரிய தாய்நாட்டின் இருப்பையும் தாய்நாட்டின் பாதுகாப்பையும் குறிப்பாக கல்வித்துறையில் தாய்நாட்டின் வளர்ச்சிக்கு சிறந்த முன்னுதாரணமாக திகழ்ந்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர் பந்துல குணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு