அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

01. கௌரவ பிரதம அமைச்சருக்கு பொது மக்களிடமிருந்து விடுக்கப்படும் கோரிக்கை / முறைப்பாடுகள் / துயரங்களை சமர்பிக்கும் முறைகள்
  • கடிதத்தினை தபால் மூலம் அனுப்புதல்.
  • இலக்கம் 58, சேர் த எர்னஸ்ட் டி சில்வா மாவத்தை, கொழும்பு 07.
  • பக்ஸ் மூலம்: 0117481514
  • வட்ஸப் மூலம்: 0719997722
  • மின் அஞ்சல் மூலம்: secretarypr@pmoffice.gov.lk
  • பொது மக்கள் தொடர்பாடல் பிரிவிற்கு வந்து கையளித்தல்.
02. பொது மக்களினால் சமர்பிக்கப்பட்ட கோரிக்கைகள் / முறைப்பாடுகள் / துயரங்கள் தொடர்பாக தற்போதைய நிலமையினை அறிந்து கொள்வது எவ்வாறு?
  • கோரிக்கை கடிதத்தில் கையடக்கத் தொலைபேசி இலக்கம் குறிப்பிடப்பட்டு இருப்பின் குறுஞ் செய்தி ஊடாக பதிவு இலக்கம் அறிவிக்கப்படும்.
  • நிறுவனத்திற்கு அனுப்படும் அனைத்து கடிதத்தினதும் பிரதியினை உரிய தரப்பினருக்கு தபால் மூலம், மின் அஞ்சல் மூலம் மற்றும் வட்ஸப் இலக்கம் வழங்கப்பட்டு இருப்பின் அதன் ஊடாக அனுப்பப்படும்.
  • கோரிக்கை தொடர்பான விடயத்தினை துரிதப்படுத்துவதற்காக தொலைபேசி இலக்கம் மூலமும் அறிவுத்தல்கள் வழங்கப்படும்.
03. பொது மக்களினால் சமர்பிக்கப்படும் கோரிக்கைகள் / முறைப்பாடுகள் / துயரங்கள் தொடர்பாக பின்னூட்டல்களை மேற்கொள்ளும் முறைகள் யாது?

கௌரவ பிரதம அமைச்சர், பிரதம அமைச்சரின் செயலாளருக்கு சமர்பிக்கப்படும் கோரிக்கைகள் தொடர்பில் துரிதகதியில் பதிலை வழங்குதற்காக அமைச்சுக்கள் / திணைக்களங்கள் / அனைத்து மாகாண சபை அமைச்சுக்கள் / மாவட்ட செயலக அலுவலகங்கள் / பிரதேச செயலக அலுவலகங்கள் ஆகிய அனைத்து நிறுவனங்களிலும் பெயர் குறிப்பிடப்பட்ட உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் இறுதிப் பதில் / தீர்வுகள் கிடைக்கும் வரை அவர்களிடம் இலத்திரணியல் மின் அஞ்சல் மூலம் உரிய செயற்பாடுகள் தொடர்பில் வினவப்படும்.

இப் பிரிவிற்கு தொடர்ந்தும் அனுபப்படும் கோரிக்கைள் / முறைப்பாடுகள் / துயரங்களில் கீழ் குறிப்பிடப்பட்ட விடயங்களை உள்ளடக்கி சமர்பிக்க முடியும்.

  • கௌரவ பிரதம அமைச்சருக்கு கோரிக்கை / முறைப்பாடுகள் / துயரங்களை சமர்பிப்பது எவ்வாறு?
    1. இலக்கம் 58, சேர் த எர்னஸ்ட் டி சில்வா மாவத்தை, கொழும்பு 07 என்ற முகவரிக்கும் தபால் மூலம் அனுப்புதல்.
    2. secretarypr@pmoffice.gov.lk பொது மக்கள் தொடர்பாடல் பிரிவின் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புதல்.
    3. 0117481514 பக்ஸ் இலகத்திற்கு அனுப்புதல்.
    4. 0719997722 வட்ஸப் இலக்கத்திற்கு அனுப்புதல்.
    5. பொது மக்கள் தொடர்பாடல் பிரிவிற்கு நேரடியாக கையளித்தல்.
  • பொது மக்கள் முறைப்பாட்டுக் பிரிவிற்கு சமூகமளிக்க வேண்டிய நேரம் யாது?
    வாரத்தின் வேலை நாட்களில் எந்த தினத்திலும் மு.ப. 8.30 இற்கும் 4.15 இற்கும் இடைப்பட்ட நேரத்திற்குள்.