பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

தென் ஆஸ்திரேலியாவின் ஆளுநர்- பிரதமர் சந்திப்பு.

தென் ஆஸ்திரேலியாவின் ஆளுநர் திருமதி Frances Adamson AC அவர்கள் ஜூன் 22ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியாவைச் சந்தித்தார்.

ஆளுநரை வரவேற்ற பிரதமர், இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே, குறிப்பாகக் கல்வித் துறையில் பேணப்பட்டு வரும் நீண்டகால நட்பு மற்றும் ஒத்துழைப்பு பற்றி விசேடமாக நினைவு கூறினார் . கல்விச் சீர்திருத்தம், தொழிற்பயிற்சி மற்றும் நிறுவன கூட்டாண்மை மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பினை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் மீதும் இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.

சமீபகால பொருளாதார மற்றும் அரசியல் சவால்களின் போது மக்களின் உடனடி தேவைகளைப் பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ள விதம் பற்றி பிரதமர், பிரதிநிதிகள் குழுவிற்கு எடுத்துரைத்தார். உயர்கல்வி கொள்கையை வலுப்படுத்துதல் மற்றும் அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துதல், தொழிற்கல்வியின் சீர்திருத்தங்கள் உட்படத் தொடர்ச்சியான கல்வி சீர்திருத்தங்கள் பற்றியும் பிரதமர் விவரித்தார்.

இலங்கையில் ஆஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீவன்ஸ் மற்றும் சிரேஷ்ட ஆஸ்திரேலியா அதிகாரிகள் குழுவினரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இலங்கை பிரதிநிதிகள் குழுவில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிக்கா போகஹவத்த, கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ மற்றும் வெளியுறவு அமைச்சின் கிழக்காசியப் பிரிவின் பணிப்பாளர் உதானி குணவர்தன ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

நாம் விளையாட்டைத் தேர்ந்தெடுப்பது அதன் பண்புகளை வாழ்க்கையில் சேர்த்துக்கொள்வதற்கே ஒழிய வெற்றியை மட்டும் இலக்காகக் கொண்டு அல்ல. - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

நாம் விளையாட்டைத் தேர்ந்தெடுப்பது ஒற்றுமை உட்பட விளையாட்டின் நற்பண்புகளை நமக்குள் வளர்த்துக்கொள்வதற்கே ஒழிய வெற்றியை மட்டும் இலக்காகக் கொண்டு அல்ல என்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

சுகததாஸ விளையாட்டு அரங்கில் ஜூன் 22 ஆம் தேதி நடைபெற்ற பாடசாலை நீச்சல் விளையாட்டு சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 50வது பாடசாலை வருடாந்திர நீச்சல் விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழாவில் கலந்துகொண்டு பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பிரதமர் பல்வேறு பிரிவுகளின் நீச்சல் மற்றும் நீர் மூழ்கும் போட்டிகளில் வெற்றி சின்னங்களை வழங்கினார். ஒட்டுமொத்த ஆண்கள் நீச்சல் சாம்பியன்ஷிப்பை தொடர்ந்து 20 வருடங்களாக மரதான புனித ஜோசப் கல்லூரியும், ஒட்டுமொத்த பெண்கள் சாம்பியன்ஷிப்பை கொழும்பு மகளிர் கல்லூரியும், ஒட்டுமொத்த கலப்பு பாடசாலைச் சாம்பியன்ஷிப்பை வத்தல லைசியம் சர்வதேச பாடசாலையும் வென்றன.

அதேபோல் நீர் மூழ்கும் பிரிவில் ஒட்டுமொத்த பெண்கள் சாம்பியன்ஷிப்பை கொழும்பு பேராயர் கல்லூரி அணியும், ஆண்கள் சாம்பியன்ஷிப்பை கொழும்பு ராயல் கல்லூரியும் வென்றன.

இந்த நிகழ்வில் மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

"நாம் விளையாட்டில் வெற்றியோடு தோல்வியையும் சமமாக அனுபவித்து தாங்கிக்கொள்ள வேண்டும். இதை நாம் முதலில் நமது பிள்ளைகளுக்குப் பழக்கப்படுத்த வேண்டும்.

கல்வி ஒரு இம்சையாக மாறிவிட்ட காலத்திலும், விளையாட்டின் மூலம் தலைமைத்துவம், அணி உணர்வு மற்றும் சகிப்புத்தன்மை போன்ற மிகவும் முக்கியமான பண்புகளை வளர்த்துக்கொள்ள முடிந்திருக்கிறது.

இன்றைய இந்த திறமைகளைக் என்னை வியக்கவைத்தன. உண்மையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நமது நாட்டின் குழந்தைகளின் திறமைகள் மிக உயர்ந்த மட்டத்தில் இருக்கிறன.

வரலாற்றில் எப்போதும் இலங்கையின் நாமத்தை சர்வதேச அளவில் ஓங்கச் செய்ய நமது விளையாட்டு வீரர்களால் முடிந்திருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் நான் அதனையும் நன்றியுடன் நினைவுகூர விரும்புகிறேன்.

இன்று என் முன்னால் இருக்கும் உங்களுக்கும் அவ்வாறு நமது நாட்டின் பெயரை சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்ல தேவையான சக்தியும் தைரியமும் கிடைக்கட வேண்டுமென நான் பிரார்த்திக்கிறேன்" என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கல்வி அமைச்சின் அதிகாரிகள், பாடசாலை நீர் விளையாட்டுச் சங்க உறுப்பினர்கள், அதிபர்கள் மற்றும் நெஸ்லே லங்கா தனியார் நிறுவன அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

அனைத்துப் பாடசாலைகளிலும் வளங்களின் நியாயமான விநியோகத்தை உறுதி செய்வதற்காக டிஜிட்டல் கற்றல் முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய .

சகல பாடசாலைகளிலும் மனித மற்றும் பௌதிக வளங்களின் நியாயமான விநியோகத்தை உறுதி செய்யும் அதே வேளை டிஜிட்டல் கற்றல் முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய வலியுறுத்தினார்.

உயர் கல்வி, கல்வி மற்றும் தொழில்சார் பயிற்சி அமைச்சர் என்ற வகையில் பிரதமர், டிஜிட்டல் கல்வி நிலை மாற்றத்தை (வகுப்புகள் 6-13) மேற்பார்வையிட அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட பணிக்குழுவுடன் ஜூன் 20ஆம் தேதி நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த கருத்துகளை வெளியிட்டார்.

கல்வித் துறையில் டிஜிட்டல் நிலை மாற்றத்தை ஆரம்பித்தல்,

உரிய சவால்களை எதிர்கொண்டு தேவையான கொள்கைகளை செயற்படுத்து கல்வித்துறையில் டிஜிட்டல் நிலை மாற்றத்தை ஆரம்பித்தல் குறித்து இந்தக் கலந்துரையாடல் கவனம் செலுத்தியது.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ,

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் தற்போது உள்ள 42,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் பற்றாக்குறை அவசரமாக தீர்க்கப்பட வேண்டும்.

தற்போதுள்ள ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக, தற்போதுள்ள வளங்களை திறம்பட பயன்படுத்தி கற்றல் இடைவெளியை குறைப்பதற்காக அடுத்த ஆறு மாதங்களுக்குள் டிஜிட்டல் கற்றல் முறைமைகளை அறிமுகப்படுத்துவதில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.

இந்த பணிக்குழுவின் முதன்மை நோக்கங்களில், மாற்றுத்திறனாளி சமுதாயம் உட்பட அனைத்துப் பாடசாலைகளுக்கும் வசதிகளின் சமமான விநியோகத்தை உறுதி செய்வது அடங்கும். இந்த இலக்கை அடைவதற்கு வலுவான, பல்துறை பணிக்குழு அவசியம் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வின் போது பணிக்குழு அதிகாரிகளுக்கு நியமன கடிதங்கள் வழங்கப்பட்டதோடு பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரி பணிக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

தொழில்சார் கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே, கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி மதுர சேனேவிரத்ன, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, கல்வி அமைச்சின் செயலாளர் திரு. நாளக்க கலுவெவ, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் திரு. வருண தனபால, பணிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பல அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடக பிரிவு

ஆசிய அபிவிருத்தி வங்கி புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு ஆதரவு வழங்க உள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) பிரதிநிதிகள், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர், பிரதம அமைச்சர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு தங்களின் முழு ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.

இந்த கருத்துகள் இன்று (ஜூன் 20) நாடாளளுமன்ற வளாகத்தில் பிரதம அமைச்சர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான ADB நாட்டு பணிப்பாளர் திரு. தகாஃபுமி கடோனோ மற்றும் பிற ADB பிரதிநிதிகளுக்கிடையே நடைபெற்ற கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்டுள்ளன.

கலந்துரையாடலின் போது, பிரதம அமைச்சர் ADB பிரதிநிதிகளுக்கு புதிய கல்வி சீர்திருத்தங்களுக்காக ஏற்கனவே எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் பாடசாலைக் கல்வியில் வரும் ஆண்டுக்கான புதிய சீர்திருத்தங்களின் செயல்படுத்தல் மற்றும் அதில் உள்ள சம்பந்தப்பட்ட சவால்கள் குறித்து விளக்கினார்.

புதிய பாடத்திட்டத்தின் தயாரிப்பு, கல்வித் துறையில் மனிதவள வளர்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பொதுக் கல்வி, தொழிற்பயிற்சி, உயர் கல்வி மற்றும் ஆரம்பகால குழந்தைப் பருவ வளர்ச்சியில் முன்னெடுப்புகள் தொடர்பான அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து பிரதம அமைச்சர் விரிவாக எடுத்துரைத்தார்.

ஆசிய வளர்ச்சி வங்கி புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்த தங்களின் திருப்தியைத் தெரிவித்து, ஆசிரியர் பயிற்சி, உட்கட்டமைப்பு மேம்பாடுகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப முன்னேற்றம் உள்ளிட்ட கல்வித் துறையின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவதற்கான தங்களின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது.

இந்த கூட்டத்தில் ADB பிரதிநிதிகள், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் செயலாளர் திரு. நாளக் கலுவெவ மற்றும் கல்வி அமைச்சின் பிற அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பிரதம அமைச்சரின் ஊடகப் பிரிவு

ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (UNICEF) பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் பிரதிநிதிகள் மற்றும் பிரதம மந்திரி கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் Marc-Andre Franche உட்பட ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (UNICEF) பிரதிநிதிகளுக்கிடையே இன்று (20) நாடாளுமன்றத்தில் சந்திப்பொன்று நடைபெற்றது.

இதில் இலங்கையில் சமாதானத்தைப் பேணுதல் , மனித உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல், சுகாதாரம், நிர்வாகம் மற்றும் நிதியளித்தல், பாலின சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டல், கல்வி, பொருளாதாரத்தை இயல்பு நிலைப்படுத்தல், காலநிலை மாற்றம், விவசாயம் மற்றும் மீன்பிடித்தொழில் ஆகிய துறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தால் வழங்கப்பட்டுள்ள திட்ட முன்மொழிவுகள் தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடல் நடைபெற்றதோடு சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான குழுவின் அறிக்கை தொடர்பாக அரசாங்கம் எடுக்கும் எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் ஆதரவை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் இதில் UNICEF பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

இந்த நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் பிரதிநிதி Andreas Karpati, பிரதம மந்திரியின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பிரிவின் பணிப்பாளர் நாயகம் தயானி மெண்டிஸ் ஆகிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

பிரதம மந்திரி ஊடகப் பிரிவு

UN Presents the 2025 Human Development Report to the Prime Minister

The Human Development Report for the year 2025, issued under the United Nations Development Programme (UNDP), was officially presented to Prime Minister Dr. Harini Amarasuriya on June 19.

The theme of this year’s Human Development Report is "People and Capabilities in the Age of AI (Artificial Intelligence)." The report discusses how artificial intelligence should be used responsibly and ethically.

The primary objective of the report is to highlight how AI can be utilized to empower public imagination, and thereby contribute to shaping the economy of a country and society in the process of development.

The event was attended by Deputy Minister of Digital Economy Eranga Weeraratna, Sri Lanka Resident Representative for UNDP program Azusa Kubota, and UNDP Sri Lanka Policy Specialist for Strategic Engagement and Innovation Team Fadil Bakir.

Prime Minister’s Media Division