பண்டாரநாயக்க சர்வதேச கற்கைகளுக்கான நிலையத்தின் (BCIS) பட்டமளிப்பு விழா பிரதமர் தலைமையில்

பண்டாரநாயக்க சர்வதேச கற்கைகளுக்கான நிலையத்தின் (BCIS) 50வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், சர்வதேச உறவுகள் மற்றும் அது தொடர்பான கற்கைகளில் டிப்ளோமா மற்றும் பட்டம் பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

சர்வதேச கற்கையில் சான்றிதழ் பாடநெறிகள், டிப்ளோமா, உயர் டிப்ளோமா மற்றும் பட்டப்பின்படிப்பு மாணவர்கள் இதன்போது சான்றிதழ்களைப் பெற்றனர்.

மாலைதீவு Policy Think Tank தலைவர் ஈவா அப்துல்லா, பண்டாரநாயக்க சர்வதேச கற்கைகள் நிலையத்தின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, நிறைவேற்றுப் பணிப்பாளர் பிரியந்தி பெர்னாண்டோ உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு