விருதுபெற்ற காட்சிக் கலைக் கலைஞரும், ஓவியரும், இலங்கை காட்சிக் கலைகள் உபகுழுவின் தலைவருமான பிரகீத் ரத்நாயக்கவின் “உத்தம புருஷ - First Person” காட்சிக் கலைக் கண்காட்சி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்கேற்புடன் ஆகஸ்ட் 19ஆம் திகதி கொழும்பு Art Rhizome கலையரங்கில் ஆரம்பமானது.
இதன்போது, பிரகீத் ரத்நாயக்க தனது 50 வருடகால வாழ்க்கை மற்றும் கலைப் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு தொகுத்த “Prageeth Rathnayake, Fifty Years of Vision, Color & Soul” எனும் விசேட நூல் பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.
இக்கலைக் கண்காட்சி ஆகஸ்ட் 20ஆம் திகதி முதல் செப்டம்பர் 07ஆம் திகதி வரை கொழும்பு Art Rhizome கலையரங்கில் பொதுமக்கள் பார்வையிடுவதற்காகத் திறக்கப்பட்டிருக்கும்.
இந்நிகழ்வில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, ஊடகப் பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் ருவன் மாபாலகம, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, இலங்கைக் கலை மன்றத்தின் தலைவர் கீர்த்தி வெலிசரகே, கலாநிதி சுனில் விஜேசிறிவர்தன உள்ளிட்ட விருந்தினர்கள், கலைஞர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு