பிரதமர் பதவியுடன் எனக்கு வழங்கப்பட்டிருக்கும் பல பொறுப்புகளுக்கு மத்தியில் இந்தப் பொறுப்பைப் பற்றியும் அறிந்தபோது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.தெற்கில் பிறந்து வளர்ந்து கொழும்பு நகரில் வாழ்ந்தாலும் வரலாற்றுச் சிறப்புமிக்க அனுராதபுரம் மற்றும் அடமஸ்தானத்தின் மீது எனக்கு தனியான அன்பும் மரியாதையும் உண்டு. ஜய ஸ்ரீ மஹா போதி மற்றும் ருவன்வெலிசேய அருகில் இருப்பதை விட எனது மனதிற்கு ஆறுதலை தரும் வேறெதுவும் இல்லை. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய - 2025-02-23