இலங்கை நிர்வாக சேவையின் (SLAS) விஷேட தரத்தின் உத்தியோகத்தரான திரு. பிரதீப் சபுதந்திரி அவர்கள் மூலோபாய தலமைத்துவ மற்றும் கொள்கைகளை அமுல்படுத்துவது தொடர்பில் நிபுணத்துவத்தினை பெற்றுக் கொண்ட கீர்த்தமிக்க தொழிலாளர் ஆவார்.
ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் மற்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் உட்பட அரசாங்கத்தின் பிரதான பல துறைகள் ஊடாக பெற்றுக் கொள்ளப்பட்ட விரிவான பல அனுபவங்களை தற்போது பிரதம அமைச்சரின் செயலாளாராக கடமையாற்றும் திரு சபுதந்திரி அவர்கள் பெற்றுள்ளார்.
திரு. சபுதந்திரி அவர்கள் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டம் தொடர்பான கலைமானிப் பட்டத்தினையும் (LLM) இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி கற்கை மற்றும் அரச கொள்கை தொடர்பான கலைமானிப் பட்டத்தினையும் பெற்றுள்ளார்.
அவரின் கல்விசார் வெற்றியில் மேற்பார்வை மற்றும் மதிப்பீடுகள் தொடர்பான பட்டப்பின் படிப்பு டிப்ளோமா மற்றும் அபிவிருத்தி கற்கை தொடர்பான பட்டப்பின் படிப்பு டிப்ளோமாவினையும் பெற்றுள்ளார்.
தொழில்சார் சட்டத்தரணியாக செயற்படுகின்றமை, இவரின் விடயத்துறைசார்ந்த நிபுணத்துவத்தினை மேலும் சித்தரித்துக் காண்பிக்கின்றது.
திரு. பிரதீப் சபுதந்திரி அவர்களின் ஆராய்ச்சி பணிகளின் போது பிரதானமாக குடியகழ்வு மற்றும் அது தொடர்பான சட்டக் கோட்பாடு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் பயிற்சிபெற்ற தொழிலாளர்களின் குடியகழ்வு மற்றும் ஆட்களை குடியகர்த்தும் வர்த்தக சட்டம் தொடர்பில் விமர்சன ரீதியிலான பகுப்பாய்வினையும் அவர் தனது நூல் ஊடாக ஆய்விற்கு உட்படுத்தியுள்ளார். தமது கற்கைகளின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட இச் செயற்திட்டங்கள் மூலம் பாரிய சமூக – பொருளாதார பிரச்சினைகளைத் தீர்க்கும் செயற்பாடுகள் குறித்து அவரின் கூடுதலான ஆர்வம் சித்திரித்துக் காண்பிக்கப்படுள்ளது.
தமது தொழில்சார் வாழ்வு பூராகவும் பல்வேறுபட்ட அமைச்சுக்கள் ஊடாக வேலைத்திட்டங்களை திட்டமிடல் மற்றும் அமுல்படுத்துவதனைப் போன்று, நிலையான அபிவிருத்தி, ஊழிய அணி முகாமைத்துவம் மற்றும் கல்வியிற்கான பங்களிப்பின் ஊடாக பாரிய பணிகள் திரு. சபுதந்திரி அவர்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொது நிருவாகம், சட்டம் மற்றும் கொள்கை பகுப்பாய்வு தொடர்பாக அவரின் பலம்பொருந்திய அறிவின் அடிப்படை, சிறந்த நிருவாக மற்றும் நிருவாக இயலுமைகள் ஊடாக இலங்கையினை அபிவிருத்தியடைந்த தேசமாக மாற்றியமைப்பதற்கு அவர் கலத்தினை தேவையின் அடிப்படையில் நிலைப்படுத்தப்பட்டுள்ளார்.