மனித வள மேலாண்மை & நிர்வாகப் பிரிவு
- பிரதம அமைச்சர் அலுவலகத்தின் நிருவாக செயற்பாடுகள்
- பணியாளர் சபை தொடர்பான நிருவாக மற்றும் ஒழுக்காற்று செயற்பாடுகள்
- பிரதம அமைச்சர் அலுவலகத்தின் நாளாந்த தபால் தொடர்பான செயற்பாடுகளை முறையாக மேற்கொள்ளல்
- மானிட வள அபிவிருத்தியிற்கு உரிய செயற்பாடுகள்
- தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டத்திற்கு உரிய செயற்பாடுகள்
- குடியுரிரம பயனாளிகள் கொளகைப் பிரகடணத்தினை தயாரித்தல்
- பிரதம அமைச்சர் அலுவலகத்தின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கு உரிய செயற்பாடுகள்
- விழா மற்றும் விஷேட நிகழ்வுகளை ஒழுங்கு செய்தல் மற்றும் வசதிகளை வழங்குதல்
- பிரதம அமைச்சர் அலுவலகத்தின் பணியாளர் சபைக் கூட்டத்தினை நடாத்துவது தொடர்பான செயற்பாடுகள்
- சுவடிக் கூடத்தினை முறையாகப் பேனுதல்
வழங்கல் சேவைகள் பிரிவு
பராமரிப்பு உப பிரிவு - செயற்பாடுகள்
போக்குவரத்து உப பிரிவு - செயற்பாடுகள்
- பிரதம அமைச்சர், பிரதம அமைச்சரின் செயலாளர் உட்பட பிரதம அமைச்சர் அலுவலகத்தின் போக்குவரத்து தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக தேவையான அனைத்து செயற்பாடுகளையும் நிவர்த்தி செய்தல்.
அபிவிருத்தி பிரிவு I
திட்டமிடல் பிரிவு
- வருடாந்த செயற்பாட்டுத் திட்டத்தினை தயாரித்தல்
- வருடாந்த முன்னேற்ற அறிக்கையினைத் தயாரித்தல்
- வருடாந்த செயற்சாதனை அறிக்கையினைத் தயாரித்தல் மற்றும் இறுதி செயற்சாதனை அறிக்கையினைத் தயாரித்தல்
- பிரதம அமைச்சர் அலுவலகத்தின் நிலையான அபிவிருத்தி நோக்கு (ளுனுபு) எட்டுவதற்கான செயற்சாதனை அறிக்கையினைத் தயாரித்தல்
- வருடாந்த செயற்பாட்டுத் திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு ஆண்டின் அனைத்து காலாண்டு அறிக்கையினைத் தயாரித்தல்
கொள்கை இணைப்புப் பிரிவு
அரச கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, பிரதம அமைச்சரின் கட்டளைகளுக்கு உட்பட்டு அவருக்கு வழங்கப்பட்டுள்ள பணிகள் மற்றும் செயற்பாடுகளை எட்டுவதற்காக தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குதல், அரச கொள்கைகளை அமுல்படுத்துவதற்காக தேவையான இணைப்புக்களை மேற்கொள்ளுதல் மற்றும் வசதிகளை வழங்குவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தினைப் போன்று சமூக அபிவிருத்தியினை மேம்படுத்துவதற்காக இப் பிரிவினால் பங்களிப்புக்கள் வழங்கப்படுகின்றன. இதற்கு அமைய அபிவருத்தி I - கொள்கை இணைப்பபுப் பிரிவின் மூலம் மேற்கொள்ளப்படும் செயற்பாட்டுப் பணிகள் கீழ் குறிப்பிடப்பட்டவாறு அமைகின்றது.
- கௌரவ பிரதம அமைச்சர் மற்றும் பிரதம அமைச்சரின் செயலாளரின் தலைமையில் நடாத்தப்படும் கலந்துரையாடல் இணைப்புக்களை மேற்கொள்ளல்.
- இக் கலந்துரையாடல்களில் எட்டப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் உரிய பின்னூட்டல்கள் செயற்பாடுகளை மேற்கொள்ளல் மற்றும் முன்னேற்றங்களை அறிக்கைப்படுத்தல்.
- கௌரவ பிரதம அமைச்சரின் தலமையிலான அமைச்சரவை உப குழுக்கள், குழு மற்றும் பிரதம அமைச்சரின் செயலாளரின் தலமையில் நடாத்தப்படும் குழுக்களுக்கு இணைவாக நடாத்தப்படும் கலந்துரையாடல்களின் இணைப்பு செயற்பாடுகளை மேற்கொள்ளல்.
- இக் கலந்துரையாடல்களில் எட்டப்பட்ட தீர்மானங்கள் உரிய பின்னூட்டல்களை மேற்கொள்ளல் மற்றும் முன்னேற்றங்களை அறிக்கைப்படுத்தல்.
- உரிய நேரத்தில் அடையாளம் காணப்படும் கொள்கைகள், மறுசீரமைப்புக்கள் மற்றும் மீள்கட்டமைப்புக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சுக்களுக்கு இடையிலான ஃ தாபன இணைப்புக்கள் மற்றும் தேவையான தலையீடுகளை மேற்கொள்ளல்.
- சமகால இபிவிருத்;தி தொடர்பான பிரச்சினைகளை அடையாளம் கானுதல் மற்றும் அப் பிரச்சினைகளை பகுப்பாய்விற்கு உட்படுத்தி கற்கை ஆய்வு அறிக்கையினை தயாரித்தல்.
- அக் கால அபிவிருத்தி பிரச்சினைகள் மற்றும் அது தொடர்பான அரச நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் இணைப்புக்களை மேற்கொள்ளல் மற்றும் தேவையான தலையீடுகளை மேற்கொள்ளல்.
அபிவிருத்தி பிரிவு II
பாராளுமன்றம் மற்றும் அமைச்சரவை விவகாரங்கள் பிரிவு
- கௌரவ பிரதம அமைச்சரினால் அமைச்சரவைக்கு முன்வைக்கப்படுகின்ற அமைச்சரவை விஞ்ஞாபனங்கள், அமைச்சரவைக் குறிப்புகளை வரைவுசெய்து அமைச்சரவை அலுவலகத்துக்கு சமர்ப்பித்தல் வரையிலான செயன்முறையை நிறைவேற்றுதல் மற்றும் இயைபான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
- பிரதம அமைச்சரின் செயலாளரினால் செயற்படுத்தப்பட வேண்டிய அமைச்சரவை முடிவுகளை இயைபான பிரிவுகளுக்கு அனுப்புதல் மற்றும் பின்ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
- 2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் கீழ் அரச நிறுவனங்கள் மற்றும் பிரசைகள் மூலம் பிரதம அமைச்சர் அலுவலகத்தின் தகவல் அலுவலருக்கு அனுப்பப்படுகின்ற கோரிக்கைகளுக்கு ஏற்புடைய அமைச்சரவை விஞ்ஞாபனங்கள், குறிப்புகள் மற்றும் முடிவுகளை தகவல் அலுவலருக்கு வழங்குதல்.
- அமைச்சரவை விஞ்ஞாபனங்கள் மற்றும் முடிவுகள் அடங்கிய பிரதம அமைச்சர் அலுவலக தரவு முறைமையை நாளதுவரைப்படுத்துதல்.
- அமைச்சரவை முடிவுகளை செயற்படுத்துவதில் முன்னேற்றத்தை அமைச்சரவை அலுவலகத்தினால் கோரப்படும் பட்சத்தில் வழங்குதல்.
- பாராளுமன்றம் ஒன்றுகூடும் ஒவ்வொரு மாதத்தின் முதலாவது கூட்ட வாரத்தின் புதன் கிழமை கௌரவ பிரதம அமைச்சரிடமிருந்து வாய்மூல விடைகள் எதிர்பார்த்து ஆளும் கட்சினதும் எதிர்க்கட்சினதும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் முன்வைக்கப்படுகின்ற 04 வினாக்கள் பொருட்டு இயைபான அமைச்சுக்களை ஒருங்கிணைப்பு செய்து தகவல்களைப் பெற்றுக்கொண்டு விடைகளை வரைவுசெய்து இயைபான தரவுகள் மற்றும் ஆவணங்கள் சகிதம் கௌரவ பிரதம அமைச்சருக்கு வழங்குதல்.
- பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 27(2)இன் இடைக்கால கட்டளை மூலம் எதிர்க்கட்சித் தலைவர் அல்லது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றின் தலைவர் ஒருவரினால் வாய்மூல விடைகள் எதிர்பார்க்கும் வினாக்களின் இறுதியில் பொது முக்கியத்துவம்மிக்க விடயங்கள் தொடர்பில் கௌரவ பிரதம அமைச்சரிடமிருந்து வினவப்படுகின்ற வினாக்கள் பொருட்டு இயைபான அமைச்சுக்களை ஒருங்கிணைப்பு செய்வதன்மூலம் விடைகளை வரைவுசெய்து கௌரவ பிரதம அமைச்சருக்கு வழங்குதல்.
- கௌரவ சனாதிபதியின் விடயப்பரப்பிற்குள் அடங்குகின்ற அமைச்சுக்கள், திணைக்களங்கள், நியதிச்சட்ட சபைகள் மற்றும் கூட்டுத்தாபனங்கள் என்பனவற்றுக்கு ஏற்புடையதாக எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களினால் முன்வைக்கப்படுகின்ற வாய்மூல விடைகள் எதிர்பார்க்கும் மற்றும் எதிர்பார்க்காத வினாக்களை சனாதிபதி அலுவலகத்துக்கு அனுப்பி விடைகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்தல் அத்துடன் கௌரவ பிரதம அமைச்சரின் விடயப்பரப்பிற்கு ஏற்புடைய வினாக்கள் பொருட்டு விடைகளை தயாரித்து பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்தல் மற்றும் அதற்கு ஏற்புடையதாக அமைச்சுக்களுடன் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
- பாராளுமன்றத்தை ஒத்திவைக்கும் சந்தாப்பத்தில் முன்வைக்கப்படுகின்ற பிரேரணைகள் தொடர்பிலான நடவடிக்கைகள்.
- பாராளுமன்றத்தை ஒத்திவைக்கும் சந்தாப்பத்தில் கேட்கப்படுகின்ற வினாக்கள் தொடர்பிலான நடவடிக்கைகள்.
- சனாதிபதி அலுவலகத்தின் கீழுள்ள நிறுவனங்களின் வருடாந்த அறிக்கைகள், முன்னேற்ற அறிக்கைகள், செயலாற்றுகை அறிக்கைகள் மற்றும் கணக்கு கூற்றுக்கள் போன்றனவற்றை கௌரவ பிரதம அமைச்சர் ஊடாக பாராளுமன்றத்தில் முன்வைத்தல் தொடர்பிலான நடவடிக்கைகள்.
- கௌரவ சனாதிபதியின் விடயப்பரப்பிற்கு ஏற்புடைய விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படுகின்ற பிரேரணை நிறைவேற்றம் கௌரவ பிரதம அமைச்சர் ஊடாக பாராளுமன்றத்தில் முன்வைத்தல் தொடர்பிலான நடவடிக்கைகள்.
கணக்குப் பிரிவு
அரசியல் யாப்பின் கீழ் பிரதம அமைச்சர் அலுவலகத்திற்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ள செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக சிறந்த முறையான நிதி முகாமைத்துவ மூலோபாய செயற்பாடுகளை அமுல்படுத்தல் மற்றும் சிறந்த முறையில் நிதி அறிக்கையினை உறுதிப்படுத்தல்.
- நிதி திட்டங்கள் மற்றும் வரவு செலவு நிருவாகம்.
- பெறுகை செயற்பாட்டு முறைகளைப் பின்பற்றி சொத்துக்களை கொள்வனவு செய்தல், பராமரிப்புக்களை மேற்கொள்ளல், அச் சொத்துக்களை பாதுகாத்தல், வருடாந்த பொருள் ஆய்வு செயற்பாடுகள் மற்றும் சொத்துக்கள் தொடர்பில் ஆவணங்களைப் பராமரித்தல்.
- வருடாந்த நிதி வெளிப்பாடுகளைத் தயாரித்தல், முகாமைத்துவ அறிக்கையினை தயாரித்தல் மற்றும் அரச உத்தியோகத்தர்களின் முற்பணம் “ டீ “ கணக்கு எல்லைகளை பேனி முற்பண கணக்கு தொடர்பில் வருடாந்த ஒப்பீட்டு அறிக்கையினைத் தயாரித்தல்.
- அரசாங்கத்தின் கணக்காய்வு உத்தியோகத்தர்களுடன் இணைப்பு செயற்பாடுகளை மேற்கொண்டு வருடாந்த கணக்காய்வு செயற்பாடுகளுக்காக தேவையான தகவல்கள் மற்றும் உதவிகளை வழங்குதல்.
- பிரதம அமைச்சர் அலுவலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்களின் சம்பளத்தினை தயாரித்தல், முற்பணம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை மேற்கொள்ளல் உட்பட மீண்டெழும் செலவினம் மற்றும் மூலதன செலவினம் தொடர்பில் செயற்பாடுகளை மேற்கொள்ளல்.
- அலுவலக செயற்பாடுகளுக்காக தேவையான நுகர்வுப் பொருட்களை கொள்வனவு செய்தல் மற்றும் அப் பொருட்கள் தொடர்பில் இருப்பு நிருவாக செயற்பாடுகளை மேற்கொள்ளல்.
பொது மக்கள் தொடர்பாடல் பிரிவு
- பொது மக்களை பாதிப்பிற்கு உட்படுத்தியுள்ள ஏதேனும் பிரச்சினைகள் தொடர்பில் நிவாரணத்தினை எதிர்பார்த்து கௌரவ பிரதம அமைச்சருக்கு அனுப்பும் யோசனைகள், கோரிக்ககைள் / குறைகள் தொடர்பாக நிவாரணம் வழங்குதல்.
- அவர்களுக்கு அரச நிறுவனங்களினால் பயன்மிக்க சேவையினை வழங்குதல்.
- பொது மக்களுக்கு துரித கதியில் வரவேற்பினை வழங்குவதற்காக அரச நிறுவனங்களுக்கு அனுப்பி இறுதிப் பதிலை வழங்கும் வரை அது தொடர்பாக பின்னூட்டல்களை மேற்கொள்ளல்.
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பப் பிரிவு
- மக்களை கேந்திரமாகக் கொண்ட அரச சேவையினை உறுதிப்படுத்தும் வகையில் பிரதம அமைச்சர் உள்ளிட்ட பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் எடுக்கப்படும் தீர்மானங்கள் மற்றும் செயற்பாடுகள் தெடர்பிலான தகவல்களை மக்களுக்கு துரிதகதியில் வழங்குவதற்கான பிரவேசங்களை வழங்குவதற்கு பிரதம அமைச்சர் அலுவலக உத்தியோகபூர்வ இணையத்தளத்தினை தேவையானவாறு தொடர்ந்தும் விருத்தி செய்தல் மற்றும் நேர தரத்தினை பேனுதல்.
- மிகுந்த நம்பிக்கை மற்றும் வினைத்திறன் மிக்க புள்ளிவிபர தொடர்புசாதனைத்தினை உறுதிப்படுத்தும் வகையில் பிரதம அமைச்சர் அலுவலகத்தின் வலையமைப்பு மற்றும் மின் அஞ்சல் சேமிப்பகத்தினை சமகாலப்படுத்தல் மற்றும் நேரடி தரத்தினை பேனுதல்.
- பிரதம அமைச்சர் அலுசவலகத்தின் செயற்பாடுகளை மிகுந்த வினைத்திறன் மற்றும் உற்பத்தித்திறன் மிக்கதாக முறைமையினை உருவாக்குதல் மற்றும் விருத்தி செய்தல்.
இது வரை உருவாக்கப்படும் மற்றும் நிர்மாணிக்கப்பட்டு வரும் புள்ளவிபர முறைமை- பிரதம அமைச்சரின் அவசர செய்திகளை அரச உத்தியோகத்தர்களுக்கு அறிவிப்பதற்காக குறுஞ் செய்தியினை அனுப்புதல் (SMS) முறைமை
- பிரதம அமைச்சரின் அவசர செய்திகளை அரச உத்தியோகத்தர்களுக்கு அறிவிப்பதற்காக குறுஞ் செய்தியினை அனுப்புதல்
- பிரதம அமைச்சரின் அவசர தகவல்களை அரச உத்தியோகத்தர்களுக்கு அறிவிப்பதற்காக குறுஞ் செய்தி அனுப்பும் (SMS) முறைமை
- போக்குவரத்து முகாமைத்துவ முறைமை
- ஆவண முகாமைத்துவ முறைமை
- அரச துறையின் ஊழியர் எண்ணிக்கை மீளாய்வு புள்ளிவிபரங்களை உள்ளடக்கக் கூடியவாறு உருவாக்கப்பட்ட முகாமைத்துவ புள்ளிவிபர முறைமை.
- சொத்து முகாமைத்துவ புள்ளிவிபர முறைமை
- மானிட வள புள்ளிவிபர முறைமை மற்றும் களஞ்சிய முகதமைத்துவ முறைமையினை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்தல்.
- தகவல்கள் மற்றும் சைபர் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக சமகால தேவைக்கு அமைய உள்ளக சுற்றரிக்கையினை வெளியிடல் மற்றும் அது தொடர்பாக அறிவுறுத்தும் செயலமர்வினை நடாத்துதல்.
- பிரதம அமைச்சர் அலுவலகத்தின் புள்ளிவிபர முறைமையினை தடைகள் இன்றி பயன்படுத்தும் இயலுமையினை உறுதிப்படுத்தும் வகையில் புள்ளிவிபர மீட்பு வலயமைப்பு (னுசு ளுவைந) தாபித்தல் மற்றும் நேரடி நிலமையினை பேனுதல்
- ஒன்லைன் கூட்டத்தினை ஒழுங்கு செய்வதற்கு உரியதாக உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்தல் மற்றும் சேவை வழங்கள்
- உத்தியோகத்தர்களின் தகவல் தொழில்நுட்ப அறிவினை விருத்தி செய்வதற்காக அலுவலக மென்பொருள் பயன்பாடு தொடர்பாக மற்றும் பிரதம அமைச்சர் அலுவலகத்தில் உள்ளக அடிப்படையில் தயாரிக்கப்பட்ட மென்பொருள் முறைமையினை பயன்படுத்தல் தொடர்பாக பயிற்சி அமர்விற்காக வளப் பங்களிப்பினை வழங்குதல்
- தகவல் மற்றும் தொடர்புசாதன தொழில்நுட்பத்தினை கொள்வனவு செய்வதற்காக தொழில்நுட்ப மதிப்பீடுகளை மேற்கொள்ளல்
- அரச துறையின் தகவல் மற்றும் தொடர்புசாதன தொழில்நுட்ப செயற்திட்;டத்தினை அமுல்படுத்துவது தொடர்பாக தேவையானவாறு மேற்பார்வை மற்றும் பரிந்துரைகளை வழங்குதல்
உள்ளகக் கணக்காய்வுப் பிரிவு
- பிரதமர் அலுவலகத்தின் அந்தந்த பிரிவுகளில் தற்போது காணப்படும் செயற்பாட்டு ஒழுங்குகள் மற்றும் உள்ளக நிருவாக முறைமையினை மதிப்பீட்டிற்கு உட்படுத்தி அதில் காணப்படும் பின்னடைவுகள் மற்றும் குறைபாடுகளை அடையாளம் கண்டு, அப் பின்னடைவுகள் மற்றும் குறைபாடுகளை தவிர்ப்பதற்காக மற்றும் காணப்படும் உள்ளக நிருவாக முறைமையினை விருத்தி செய்வதற்கு தேவையான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குதல்.
- முகாமைத்துவ கணக்காய்வுத் திணைக்களத்தின் வழிகாட்டல் ஆலோசனைக்கு அமைய கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக் கூட்டத்தினை நடாத்துதல்.
- உள்ளக கணக்காய்விற்கு அமைய. உள்ளக கணக்காய்வு செயற்பாடுகளை மேற்கொள்ளல் மற்றும் கணக்காய்வு மேற்பார்வை பரிந்துரைகளுடன் பிரதம அமைச்சரின் செயலாளருக்கு அறிக்கைப்படுத்தல்.
- முகாமைத்துவ கணக்காய்வுத் திணைக்களத்தின் DMA/AMC/2/2021/01 முகாமைத்துவ கணக்காய்வு வழிகாட்டல் ஆலோசனைக்கு அமைய பிரதான உள்ளக கணக்காய்வின் மதிப்பீட்டு அறிக்கையினை காலாண்டு அடிப்படையில் முகாமைத்துவ கணக்காய்வுத் திணைக்களத்திற்கு அனுப்புதல்.
- 2009.06.09 ஆம் திகதிய இலக்கம் : DMA/2009(1) திகதிய கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ சுற்றரிக்கைக்கு அமைய காலாண்டு அறிக்கையினை தேசிய கணக்காய்வு அலுவலகத்திற்கு அனுப்புதல்.
- காலண்டு அடிப்படையில் உள்ளக கணக்காய்வு அறிக்கை (ஒப்பீட் அறிக்கை ஃ மாதிரிகள் 6) முகாமைத்துவ கணக்காய்வு திணைக்களத்திற்கு அனுப்புதல்.
- இது வரையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைகள் மற்றும வெளியீடுகள்
- முகாமைத்துவ குழு கூட்ட அறிக்கை ( 2023 முதலவாது, மற்றும் மூன்றாவது காலாண்டிற்காக)
- பிரதான உள்ளக கணக்காய்வின் மதிப்பீட்டு அறிக்கை (2022 இறுதி, 2023 முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்;றாவது காலாண்டிற்காக)
- 2009.06.09 ஆம் திகதிய இலக்கம் : DMA/2009(1) திகதிய கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ சுற்றரிக்கைக்கு அமைய தயாரிக்கப்பட்ட காலாண்டு அறிக்கை (2022 இறுதி, இரண்டாவது, காலாண்டிற்காக)
ஊடக மற்றும் தொடர்புசாதனப் பிரிவு
- கௌரவ பிரதம அமைச்சர் தொடர்பான ஆவணங்களுக்காக தகவல்களை சேகரித்தல் மற்றும் வெளியீடுகளை வெளியிடல்
- கௌரவ பிரதம அமைச்சரின் பாராளுமன்ற செயற்பாடுகள், ஊடகங்களுக்காக தேவையான அறிவித்தல்களை வழங்குதல்
- கௌரவ பிரதம அமைச்சருக்குரிய சமூக ஊடக செயற்பாடுகள்
- அலரி மாளிகையினை பார்வையிட வருகைதரும் மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்களை வழங்குதல்
நீதிப் பிரிவு
- பிரதமர் அலுவலகத்தில் சட்ட ரீதியிலான செயற்பாடுகளுக்கு உரியதாக இணைப்புப் பணிகள் மற்றும் பகுப்பாய்வு செயற்பாடுகளை மேற்கொள்ளல்.