அவிசாவளை மாணிக்கவத்தை ஸ்ரீ விஜயராம விஹாரையின் வித்யாதர்ம தம்ம பாடசாலையின் புதிய இரண்டு மாடிக் கட்டிடம் இன்று (2023.10.29) பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

யோகியானே ஜினவங்ச நாயக்க தேரர் நினைவுக் கட்டிடம் எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய இரண்டு மாடிக் கட்டிடத்தின் வளாகம், பிரதமர் நகர அபிவிருத்தி மற்றும் புண்ணிய பூமி அபிவிருத்தி அமைச்சராக இருந்தபோது விகாரைக்கு அன்பளிப்புச் செய்த நிலமாகும். பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சராக இருந்து மாணிக்கவத்தை கிராமத்திற்கு மின்சாரம், நீர், தொலைபேசி வசதிகள், வீதிகள் நிர்மாணம் உள்ளிட்ட தம்ம பாடசாலை வளாகத்தை நன்கொடையாக வழங்கியமைக்கு நன்றி தெரிவித்து வித்தியா தம்ம அறநெறிப் பாடசாலையின் அதிபர் குருவிட்ட ரதனவங்ச தேரரினால் பிரதமருக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாணிக்கவத்தை ஸ்ரீ விஜயராமதிபதி கோனகல ஜினரதன தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, பிரதேசத்தின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் தம்ம பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டனர்.