பிரதமர் கதுருவெல இசிபதன மற்றும் பொலன்னறுவை ஜயந்தி விகாரைகளின் விகாராதிபதிகளைச் சந்தித்தார்

பொலன்னறுவை மாவட்டத்தில் கல்வி தொடர்பான கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஒக்டோபர் 24ஆம் திகதி வரலாற்றுச் சிறப்புமிக்க இசிபதன விகாரைக்குச் சென்று, சங்கைக்குரிய உடகம ஸ்ரீ தம்மானந்த தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரைச் சந்தித்தார்.

இதன்போது, புதிய கல்விச் சீர்திருத்தச் செயற்பாடுகள் மற்றும் மத நல்லிணக்கம் தொடர்பாக அவ்விகாரையின் விகாராதிபதியுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

அதனைத் தொடர்ந்து, கதுருவெல ஜயந்தி விகாரைக்குச் சென்ற பிரதமர், அவ்விகாரையின் விகாராதிபதியான சங்கைக்குரிய கதுருவெல தம்மபால தேரரைச் சந்தித்து, அவரது நலன் குறித்து விசாரித்தறிந்தார்.

இந்நிகழ்வில், பொலன்னறுவை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் பிரதி அமைச்சருமான திரு. டி. பி. சரத் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு