புதுடில்லி நகரிலுள்ள மோல்டா உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பிலான உயர்ஸ்தானிகர் Reuben Gauci அவர்கள் இன்று (27) கொழும்பு பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்தார்.
2025ஆம் ஆண்டில், இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர தொடர்புகளின் 25வது ஆண்டு பூர்த்தியாவதுடன் மோல்டா மற்றும் இலங்கைக்கிடையிலான இரு தரப்பு உறவுகளை தொடர்ந்தும் பலப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கையுடனான ஒத்துழைப்பை பலப்படுத்துவதற்கு மோல்டா அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதாக உயர்ஸ்தானிகர் Reuben Gauci சுட்டிக்காட்டினார்.
இங்கு கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, உலகின் புகழ்ப்பெற்ற சுற்றுலாத் தளமாக இலங்கையின் சுற்றுலாத் துறையை கட்டியெழுப்புவது தொடர்பிலும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலாத் துறைகளில் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதன் முக்கியத்துவம் குறித்தும் கருத்து வெளியிட்டார்.
பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹாவத்த, வெளிவிவகார அமைச்சின் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்கா பிரிவிற்கான பணிப்பாளர் இசுரிகா கருணாரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடக பிரிவு