மஹாபொல புலமைப் பரிசில் கல்வித்துறையில் ஒரு பாரிய புரட்சிக்கு வித்திட்டுள்ளது... - பிரதமர் தினேஷ் குணவர்தன

மஹாபொல நிழலின் கீழ் கல்வியையும் அறிவையும் ஒன்றிணைக்கும் புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன...

ஒரு தசாப்தத்தின் பின்னர் நேற்று (17) ஜா எல நகரசபை விளையாட்டரங்கில் நடைபெற்ற ’மஹாபொல’ கல்வி மற்றும் வர்த்தக கண்காட்சியின் இறுதி நாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்-

பத்து வருடங்களுக்குப் பின்னர் புத்துயிர் பெற்ற மஹாபொல இலங்கையின் வரலாற்றை மாற்றியமைத்த ஒரு விசேட நிகழ்ச்சித்திட்டமாகும். மகாவலி நதியைப் போல் ஊற்றெடுத்துச்செல்லும் மஹாபொல, லலித் அதுலத்முதலி அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டதன் பின்னர் பல்வேறு வழிகளில் விரிவடைந்து நாடு முழுவதும் பயணித்து, பல்வேறு புரட்சிகளைச் செய்து மஹாபொலயாக மாறியது.

லலித் அதுலத்முதலியுடன் பாராளுமன்றத்தில் ஒரு உறுப்பினராக இருந்தவன் என்ற வகையில் அவர் எல்லா சந்தர்ப்பங்களிலும் ஒரு விசேட சொற்பொழிவாளராக ஏதேனும் ஒரு புதிய விடயத்தை பாராளுமன்ற வரலாற்றில் சேர்த்தார். அதனால்தான் இன்றும் அவரை மதிக்கிறோம். ஒரு சிறந்த ஜனநாயகவாதியாக, அவர் தனது எதிர் கருத்துக்களை கொண்டவர்களுடன் சேர்ந்து கலந்துரையாட முடியுமான ஒரு முறைமையை எமது பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு அளித்தார். அதிலும் அவர் புத்தாக்கத்துடன் உருவாக்கிய மஹாபொல எமது நாட்டு பிள்ளைகளின் எதிர்காலத்திற்கானதாகும்.

ஒவ்வொரு தாயும் தந்தையும் ஒரு பிள்ளையின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கிறார்கள். தமது அன்புக்குரிய பிள்ளைகள் அந்த எதிர்காலத்திற்கு செல்ல வேண்டிய பாரிய பிரச்சினைகளை தீர்த்து எமது கிராமப்புறங்களிலும் நகரங்களிலும் உள்ள பெருந்தொகையான பிள்ளைகளுக்கு வழங்கப்படும் மஹாபொல புலமைப்பரிசில் மூலம் இவ்வாறான விளைவை ஏற்படுத்த முடியும் என்பதை அவர் எடுத்துக்காட்டினார்.

ஊழியர் சேமலாப நிதியம் இலங்கையில் உள்ள மற்றும் ஆசியாவில் உள்ள ஊழியர்களுக்கான மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றாக மாறியுள்ளது. அதிலிருந்து இவ்வளவு வலுவான மாபெரும் வங்கி உருவாகும் என்று ஆரம்பத்தில் யாரும் நினைக்கவில்லை. இந்த மஹாபொல திட்டத்தின் மூலம் கல்வியில் இவ்வளவு பெரிய புரட்சியை ஏற்படுத்த முடியும் என்று லலித் அதுலத் முதலி அவர்கள் கூட நினைக்கவில்லை.

இந்த நாட்டை கட்டியெழுப்பக்கூடிய பிள்ளைகள் மஹாபொலவின் மூலம் உருவாகி இன்றும் நாட்டின் பல்வேறு நிறுவனங்களிலும் சர்வதேச ரீதியிலும் பணியாற்றி வருகின்றனர். மஹாபொல வேலைத்திட்டத்தை மீள ஆரம்பித்து முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கையானது எமது நாட்டின் வளரும் தலைமுறையினருக்கானது. அன்று மகாபொல ஆரம்பிக்கப்பட்ட போது விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு பல்கலைக்கழகங்கள் இருந்தன.இன்று நாட்டில் மூன்று நான்கு மடங்கானவர்களுக்கு அரச பல்கலைக்கழக வாய்ப்புகள் உள்ளன. இந்த நாட்டில் இருபதுக்கும் மேற்பட்ட தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளன.

மஹாபொல என்பது புதிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் சவால்களை வெற்றிகொள்ளும் வகையில் மாற்றியமைக்கும் ஒரு மையமாகும். மஹாபொலவின் நிழலில் கல்வியையும் அறிவையும் இணைக்க முடியும் என்ற புதிய செய்தி நாட்டுக்கு வழங்கப்படுகிறது. சவால்களை வெற்றகொள்வதற்கு, பாரம்பரியத்தை மாற்றி, புதிய சவால்களை வெற்றிகொள்ளும் ஒரு நாட்டின் தலைமுறையாக மாற வேண்டும் என்று இந்த மகாபொல எமக்குச் சொல்கிறது.

இந்நிகழ்வில் அமைச்சர் நளின் பெர்னாண்டோ, வடமேல் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு