குருநாகல் மாவட்ட சங்கநாயக்க பதவிக்கு தெரிவாகியுள்ள திஸ்ஸவට சுமனானந்த நாயக்க தேரருக்கு சன்னஸ் பத்திரம் பிரதமரினால் வழங்கிவைப்பு

ஸ்ரீலங்கா அமரபுர சிறி சத்தம்ம யுக்திக மாத்தறை மகா நிகாயவின் குருநாகல் மாவட்ட சங்கநாயக்க பதவிக்கு தெரிவாகியுள்ள சங்கைக்குரிய திஸ்ஸவ சுமனானந்த நாயக்க தேரருக்கான சன்னஸ் பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று (26) கரதன கல்லென் விகாரையில் இடம்பெற்றது.

இலங்கை அமரபுர சிறி சத்தம்ம யுக்திக மாத்தறை மகா நிகாயவின் பதிவாளர் சங்கைக்குரிய பெரகம விமலதிஸ்ஸ நாயக்க தேரரால் சன்னஸ் பத்திரம் வாசிக்கப்பட்டதன் பின்னர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவினால் சன்னஸ் பத்திரம் வழங்கிவைக்கப்பட்டது. விவசாயம், கால்நடை மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் நாமல் கருணாரத்னவினால் விஜினிபத (பாரம்பரிய விசிறி ) வழங்கிவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ஷ்யாமோபாலி மகா நிகாயவின் அஸ்கிரி பிரிவின் பிரதம பதிவாளர் பேராசிரியர் தும்முல்லே சீலக்கந்த தேரர் அனுசாசன உரை நிகழ்த்தினார்.

பிராந்திய மற்றும் தேசிய மட்டங்களில் சமய மற்றும் ஆன்மீக நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுவரும் ஒரு சிறந்த குணாதிசயத்தைக் கொண்ட ஒரு இளம் துறவியாக சங்கைக்குரிய திஸ்ஸவ தேரரை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். இந்த வரலாற்று சிறப்புமிக்க கரத்தன கல்லேன் விஹாரையில் வசித்த எமது மதிப்பிற்குரிய நாயக்க தேரருக்குப் பின்னர், இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு மகாநாயக்க தேரராக சங்கைக்குரிய சுமனானந்த தேரர் இருந்து வருகிறார். இந்தக் காலத்தில் இந்தக் விகாரையைக் கட்டி முடிப்பதற்கும், அறநெறிப் பாடசாலையை மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு வருவதற்கும், தனது துறவற வாழ்க்கையுடன் தொடர்புடைய மதக் கடமைகளை நிறைவேற்றுவதற்கும் தேரர் காட்டிய அர்ப்பணிப்பு அனைவரினதும் மரியாதைக்குரியதாகும் என்றும் அவர் கூறினார்.

இந்நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உரையாற்றினார்.

சங்கைக்குரிய திஸ்ஸவ சுமனானந்த தேரர், முழு நாட்டிற்கும் தேசத்திற்கும் சிறந்த சேவையைச் செய்த தேரர் ஆவார். அவர் இளம் வயதிலேயே சமயத்தை கற்று தேரர்களின் வழிகாட்டுதலின் கீழ் அடிப்படைக் கல்வியைப் பெற்றார். பின்னர் அவர் அனுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பட்டம் பெற்றார். மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த கரத்தன கல்லென் விகாரைக்குச் சென்று, உள்ளூர் நன்கொடையாளர்களின் உதவியுடன் அதை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டார். அவர்கள் அப்பகுதியின் பிள்ளைகளுக்கு அறநெறிக்கல்வியை வழங்குவதற்கு முயற்சி எடுத்தது மட்டுமல்லாமல், இலவச ஆங்கிலம் மற்றும் கணினி கல்வியை வழங்கவும் நடவடிக்கை எடுத்தனர்.

2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தம் முதல் கோவிட்-19 தொற்றுநோய் வரை ஏற்பட்ட அனைத்து பேரழிவுகளாலும் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அளித்த பங்களிப்புகளை நாங்கள் நன்றியுடன் நினைவு கூர்கிறோம்.

தேசிய மற்றும் சமய பொது விவகாரங்களில் முன்னின்று தேசிய அரசியலில் தலைமைத்துவத்தை வழங்குபவர்கள் வழங்கும் சேவை அனைவருடையவும் பாராட்டைப் பெற்றதாகும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா அமரபுர சிறி சத்தம்ம யுக்திக மாத்தறை மகா நிக்காயவின் அனுநாயக்க தேரர், சங்கைக்குரிய சிறிநந்தாபிதான தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ வர்ணசூரிய, பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மப்பிரிய திஸாநாயக்க, சுஜீவ திஸாநாயக்க, பொது மக்கள் பிரதிநிதிகள், கிராம மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு