தேசிய போர்வீரர் தின நிகழ்வு பிரதமர் தலைமையில்...

தாய்நாட்டின் ஒருமைப்பாட்டைக் பாதுகாக்க தம் இன்னுயிர்களை தியாகம் செய்த வீரர்களை கௌரவிக்கும் 15வது தேசிய போர்வீரர் தின நிகழ்வு பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இன்று (2024.05.19) ஸ்ரீ ஜயவர்தனபுர பாராளுமன்ற விளையாட்டரங்க வளாகத்தில் அமைந்துள்ள போர்வீரர் நினைவுத்தூபிக்கு முன்பாக இடம்பெற்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், பாதுகாப்புப் பணிக்குழாம் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன், முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் ஃப்ளீட் வசந்த கரண்ணாகொட, முன்னாள் விமானப்படைத் தளபதி மார்ஷல் ஒப் த எயார் ரொஷான் குணதிலக்க, மக்கள் பிரதிநிதிகள், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க, அரச அதிகாரிகள், ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே உள்ளிட்ட அதிகாரிகள், இராணுவ வீரர்கள், இராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு