ஆசிய கோப்பையை வென்ற நமது நெட்பால் அணிக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்

பன்னிரண்டாவது ஆசிய வலைப்பாந்தாட்டப்போட்டியில் சாம்பியனான எமது இலங்கை அணியினருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த இலக்கை நோக்கிச் சென்றமை சிறப்பானது. ஆசியாவில் முதலிடத்தைப் பெற்று இலங்கையை இப்பிராந்தியத்தில் முன்னணியில் திகழச் செய்வதற்கு மிகுந்த அர்ப்பணிப்புடன் செயலாற்றிய தேசிய வலைப்பந்தாட்டக் குழுவின் முயற்சியானது எமது தாய்நாட்டிற்கு பெருமையைத் தேடித்தந்துள்ளது.
சரியான திசையில் வழிநடத்தி, எல்லாச் சந்தர்ப்பத்திலும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்நாட்டின் இளந்தலைமுறையினரே! உங்கள் அனைவருக்கும் எம் தேசத்தினரின் பாராட்டுக்கள் உரித்தாகுக!

தினேஷ் குணவர்தன
பிரதமர்