விவசாய சமூகத்தின் மீதுள்ள நம்பிக்கையின் அளவுக்கு நாம் உணவில் தன்னிறைவு பெற்ற தேசமாக மாற முடியும். - பிரதமர் தினேஷ் குணவர்தன.

வாரியபொல, நுவரகந்த புராதன ரஜமகா விகாரையில் 2024.05.27 அன்று இடம்பெற்ற புனித தூபிக்கு அடிக்கல் நாட்டும் வைபவத்தின் போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்-

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிலம் எமது நாட்டின் வரலாற்றில் நாகரீகத்தின் அடித்தளத்தை கட்டியெழுப்பிய பூமியாகும். ஒரு பண்பாடான தேசத்திற்கு பௌத்த சமயத்தின் ஒளியை கிராமம் கிராமமாக கொண்டு சேர்ப்பதில் மகாசங்கத்தினர் பெரும் பங்கு வகித்தனர்.

தேவநம்பியதிஸ்ஸ மன்னன் ஆட்சிக்காலத்தில் இலங்கையின் முதலாவது தலைநகரை நிர்மாணிக்க வந்து அதற்கு முன் தம்பதீபவுடன் மன்னன் மேற்கொண்ட பலவிதமான கலந்துரையாடல்களின் பலனாக, ஒரு புனித நாளாக, அடுத்த வாரம் ஒவ்வொரு விகாரைகளிலும் சமயக் கிரியைகளில் ஈடுபட்டு மஹிந்த தேரர் பௌத்த சாசனத்தை நிறுவிய பயணம் நினைவுகூரப்படுகிறது.

இப்படிப்பட்ட வரலாற்றைக் கொண்ட ஒரு தேசத்தின் வரலாற்றைப் பாதுகாக்கும் வகையில், ஆயிரக்கணக்கான கிராமங்களில் விகாரைகள் மட்டுமன்றி நாகரீகமும் கட்டியெழுப்பப்பட்டது. அந்த நாகரீகத்தின் மையமாக விகாரைகளே விளங்கின.

நாம் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு தேசத்தை கட்டியெழுப்பிய பாரம்பரியத்தை கொண்டவர்கள். நீருடன் முழு உலகிற்கும் முன்னுதாரணமாக இருக்கக் கூடிய பல்வேறு முறைமைகளினாலேயே இன்றும் உலகம் இலங்கையைப் பற்றி பெருமையுடன் கொண்டிருக்கிறது. ஒரு தீவு என்பதால், நாம் எப்போதும் கடல் பாதையின் பயன்பாட்டிற்கும் அச்சுறுத்தலுக்கும் உட்பட்ட ஒரு நாடு.

நாட்டைக் பாதுகாக்க அன்றைய மன்னர்கள் கிராமங்களிலிருந்து விசேட பலத்தைப் பெற்றதால் எமது சுதந்திரத்தைப் பாதுகாக்க முடிந்தது. வெளிநாட்டு ஆக்கிரமப்பாளர்களால் பல்வேறு காலகட்டங்களில் நாங்கள் பின்தள்ளப்பட்டோம். மீண்டும் முன்னோக்கி நகர்ந்தோம்.

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் ஊடாக ஆயிரக்கணக்கான குளங்களுக்கு நீர்வளத்தினை வழங்கும் இப்பிரதேசங்களை அபிவிருத்தி செய்து ஏனைய பிரதேசங்களுக்கும் நீரை கொண்டு செல்வதற்கான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

அண்மைக் காலத்தில் எமது நாட்டின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது.

இரண்டாம் உலகப் போரின் போது, ஆங்கிலேயர் காலத்தில் நாடு இப்படியான ஒரு வீழ்ச்சியை சந்தித்தது. அந்த காலத்தில், மக்கள் எதிர்பாராதவற்றையும் உண்ண வேண்டியிருந்தது. எமது நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப உதவிய முக்கிய காரணிகளில் ஒன்று எமது விவசாயிகள்.

விவசாய சமூகத்தின் மீதுள்ள நம்பிக்கையின் அளவுக்கு நாம் உணவில் தன்னிறைவு பெற்ற தேசமாக மாற முடியும். இதன் மூலம் எமது உணவு உற்பத்தி மட்டுமின்றி வெளிநாடுகளுக்குச் செல்லும் பணத்தையும் எமது நாட்டு நலனுக்காக பயன்படுத்த முடியும். அதன் மூலம், எமக்கு அபிவிருத்தித் திட்டங்களில் மீண்டும் பிரவேசிப்பதற்கான வாய்ப்பைப் பெற்றுக்கொள்ள முடியும்.

எமக்கு உதவி வழங்கும் வெளிநாடுகள் இலங்கை மக்கள் மீது பாரிய நம்பிக்கையை வைத்துள்ளன. கடந்த இரண்டு பருவங்களில் விவசாயத்தின் மீது இலங்கையர்கள் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தனர் என்பது உங்களுக்குத் தெரியும்.

அந்த நம்பிக்கையை எமது நாட்டு விவசாயிகள் நிறைவேற்றியுள்ளனர்.

அதற்காக அரசாங்கம் வழங்க முடியுமான பல்வேறு சலுகைகளைப்பெற்றுக்கொடுத்ததன் மூலம் கிடைத்த அறுவடையின் பலன் இலங்கைக்கே பெருமையாக அமைந்ததுடன், சர்வதேச நம்பிக்கையை மீளப் பெறுவதற்கும் பெரும் காரணியாக அமைந்தது.

குறிப்பாக வளமான விளைநிலங்கள் உள்ள பகுதியில், விவசாயிகளுக்கு அந்த விசேட மரியாதையை அளிக்க வேண்டியது அவசியமாகும்.

இந்த விகாரை வாலகம்பா மன்னன் கேந்திரஸ்தானமாகக் கொண்டிருந்த விகாரையாகும். அதை இலங்கை வரலாறு என்றும் மறக்க முடியாது. எனவேதான் அரசாங்கம் இதற்கு அனைத்து ஆதரவையும் வழங்கி வருகிறது.

நாம் விவசாயம் செய்து அறுவடை செய்த பின் முதலில் யாத்திரைகளை மேற்கொள்ளும் தேசத்தினர். அதன்படி அனுராதபுரம் மற்றும் பல்வேறு புனித தலங்களுக்கு பயணிக்கிறோம்.

அந்த பாரிய கட்டிடங்கள் எமது பொதுமக்களின் ஆதரவின் காரணமாக கட்டியெழுப்பப்பட்டன. அவ்வளவு தூரம் திட்டமிட்டு அந்த இடங்களை நிர்மாணித்து அந்த பெருமைக்குரிய வரலாற்றை கட்டமைக்க அவற்றுக்குத் தலைமை தாங்கிய மன்னர்களினால் முடிந்தது.

எமது நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின் பெருமைக்குரிய வரலாற்றில், சிறுவர்களும் வளர்ந்தவர்களும் மற்றும் வயதானவர்களும் சங்கைக்குரிய வாரியபொல சுமங்கல தேரரை மறக்க முடியாது.

சூரியன் மறையாத பேரரசு என்று அழைக்கப்படும் அரச அதிகாரத்தின் முன், கொடியை இறக்கி, சரியான நேரத்தில் உறுதியளித்தபடி செயற்படுங்கள் என்று கூறும் அளவு தைரியத்துடன் ஒரு பிக்கு இப்பகுதியில் இருந்து உருவானார்.

இது நாட்டிற்கு பெருமை சேர்த்தது மட்டுமன்றி, சாசனத்தின் பலத்தையும் நாட்டு மக்களின் பலத்தையும் எடுத்துக்காட்டிய ஒரு சந்தர்ப்பமாகும்.

பொருளாதார நெருக்கடி ஓரளவேனும் நீங்கும் போது இப்பகுதிகளின் அபிவிருத்திக்காக ஒன்றிணைந்து செயற்படுவோம். விவசாயம் மட்டுமின்றி, கிராமிய கைத்தொழில் துறை மூலம் உணவு உற்பத்தி போன்ற வேறு துறைகள் ஊடாக பயணிக்க முடியுமான வழியாக மாற்றுவோம்.

இந்த நிகழ்வில், மல்வத்தை மகா விகாரை அதிகரண சங்கநாயக்க தேரர் ஒக்கமுவே சீலரதன தேரர், நுவரகந்த புராதன விஹாராபதி தலஞ்சியே பியரதன தேரர், விகாராதிகாரி நேடியே சீலரதன தேரர் மற்றும் மகா சங்கத்தினர்கள், இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள திஸாநாயக்க உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு