தனது உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்துகொண்ட பிரதமர் பூட்டானிலிருந்து புறப்பட்டார்

பூட்டானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்துகொண்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி Royal Bhutan Airlines நிறுவனத்தின் 200 Q இலக்க விமானத்தில் இலங்கை நோக்கிப் புறப்பட்டார்.

அவரை வழியனுப்பி வைக்கும் நிகழ்வில் பூட்டானின் கல்வி மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் யீசாங் தே தாபா (Yeezang De Thapa) மற்றும் பூட்டானின் வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் திரு. டி.என். துங்கியெல் (D.N. Dhungyel) ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு