உலக தத்துவங்கள் மற்றும் மதங்கள் பற்றிய கருத்தை அநகாரிக தர்மபால அர்த்தமுள்ள முறையில் முன்வைத்ததால், அவர் பௌத்த சமயத்தை உலகிற்கு எடுத்துச் சென்றார். - பிரதமர் தினேஷ் குணவர்தன.

உலகப் பல்கலைக் கழகங்கள் பௌத்தத்தைப் பற்றி ஆய்வு செய்யத் தொடங்கி ஒரு நூற்றாண்டு கடந்துவிட்ட நிலையில் நாம் எங்கே இருக்கிறோம்?

மரதானை மகாபோதி அக்ரஸ்ராவக்க மகா விகாரையில் இன்று (17.09.2023) நடைபெற்ற அநாகரிக தர்மபாலவின் 159வது பிறந்தநாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அநகாரிக தர்மபால பிக்குவாக இருக்கும் சிலைகள் எங்கும் இல்லை. இதன்போது அவர் பிக்குவாக இருக்கும் சிலைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

இங்கு மேலும் உரையாற்றிய பிரதமர் -

"அனகாரிக தர்மபால, உலகிற்கு மிக உயர்ந்த மனித நேயத்தை வழங்கிய இலங்கையின் மகன். இப்படி ஒரு கடினமான பயணத்தை அவர் மேற்கொள்வதற்கு மனிதாபிமானத்தின் குணங்களாலும், பௌத்தத்தின் ஒளியினாலுமே சாத்தியமானது. அதன் காரணமாக, உலக வாழ் மக்களுக்கு புத்த பகவானின் போதனைகளை வழங்க முடிந்தது.

இளவரசர் சித்தார்த்தன் பிறந்து, ஞானம் பெற்று, உபதேசம் செய்த இடங்கள், அனகாரிக தர்மபாலாவின் தலையீடு மற்றும் பணியின் காரணமாகவே உலக மக்களுக்கு மீண்டும் கிடைக்கலானது.

அந்தப் பகுதிகளுக்குச் சென்று துன்பப்பட்டுக் கொண்டு பயணம் செய்ததால்தான் அவர்களால் அந்த இடங்களை உலக மக்களுக்கு வழங்க முடிந்தது. இல்லையெனில், அந்த இடங்கள் பற்றி இன்றும் கலந்துரையாடப்பட்டுக்கொண்டிருக்கலாம்.

அநாகரிக தர்மபாலவின் அர்ப்பணிப்புக்கு இந்திய அரச தலைவர்கள் வழங்கிய ஆதரவை இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை அரசின் சார்பில் நினைவு கூர விரும்புகின்றேன். அனகாரிக தர்மபால பௌத்தத்தின் அர்த்தத்தை உலகிற்கு எடுத்துச் சென்றார்.

கடந்த நூற்றாண்டிலும் அதற்கு முன்னரும் நிலவிய உலகத் தத்துவங்கள் மற்றும் மதங்கள் பற்றிய கருத்தை மிகவும் எளிமையான மற்றும் அர்த்தமுள்ள மொழியில் முன்வைத்ததால், பௌத்தத்தின் செய்தியை உலகிற்கு எடுத்துச் செல்வதில் அநகாரிக தர்மபால ஒரு தனித்துவமான வாய்ப்பை உருவாக்கினார்.

இதைப் பற்றி பல்வேறு நாடுகளில் கேள்விப்பட்ட மற்றும் வாசித்தவர்கள் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் வரத் தொடங்கினர். உலகப் பல்கலைக் கழகம் பௌத்தம் பற்றி ஆய்வு செய்யத் தொடங்கி ஒரு நூற்றாண்டு கடந்துள்ள நிலையில், அநகாரிக தர்மபாலவின் நூற்றி ஐம்பத்தொன்பதாம் பிறந்த நாளை நாம் கொண்டாடுகிறோம்.

பானகல உபதிஸ்ஸ நாயக்க தேரர் இந்த இடங்களுக்கு புத்துயிர் அளிக்க உழைத்தார். எனவே, சர்வதேச உறவுகளை மீளக் கட்டியெழுப்புவதற்கும் தலைமைத்துவத்தை வழங்குவதற்கும் பானகல உபதிஸ்ஸ நாயக்க தேரர் ஆற்றிய பணி மகா போதிக்கு மாத்திரமன்றி உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களுக்கும் பெரும் செய்தியாக அமைந்தது.

உலகம் மாறிக்கொண்டிருக்கிறது. மேலும் உலக மக்கள் ஒரு புதிய வாழ்க்கை முறையைத் தேடுகிறார்கள். புத்தபெருமான் எமக்கு விட்டுச்சென்ற விடயங்கள் இன்று ஒவ்வொரு நாட்டிலும் பேசப்படுகின்றன. மக்களின் வாழ்க்கையும் சமூகமும் இந்த கோட்பாட்டின் உன்னத பண்புகளிலிருந்து உருவாக்கப்படும் இந்த நேரத்தில், உலக தர்ம பிரச்சார சேவையால் நிறைவேற்றப்பட்ட பணி மகத்தானது."

இங்கு அனுசாசன உரை நிகழ்த்திய மகாபோதி சங்கத்தின் தலைவர் , ஜப்பானின் பிரதம சங்கநாயக்க தேரர் சங்கைக்குரிய பானகல உபதிஸ்ஸ தேரர், "ஒரு சிங்கள பௌத்தராக, அநகாரிக தர்மபால நன்றி செலுத்தும் பண்பை மிகச்சரியாகப் பின்பற்றினார்.

அனகாரிக தர்மபாலவின் பணியை முன்னெடுத்துச் சென்ற நான், இருபத்து நான்கு வருடங்கள் மகாபோதி சங்கத்தின் தலைவராக கடமையாற்றினேன். பிரதமர் தினேஷ் குணவர்தன, நகர அபிவிருத்தி அமைச்சராக இருந்த போது, மகா போதி சங்கத்திற்காக பல பணிகளை செய்தார். சாஞ்சியில் கட்டிடங்களை நிர்மாணித்தார். "சாஞ்சியை முன்னேற்றினார். இன்றும் சாஞ்சி விகாரையில் அவரது படம் வைக்கப்பட்டுள்ளது. ஆகையால் நீ சாஞ்சியில் நினைவுகூரப்படுபவராக உள்ளீர்கள்"

இந்நிகழ்வில் சங்கைக்குரிய போதாகம சந்திம தேரர், சங்கைக்குரிய அம்புலுகல சுமங்கல தேரர் உட்பட மகா சங்கத்தினர், பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, பதில் இந்திய உயர்ஸ்தானிகர் சத்தியாஞ்சல் பாண்டே, மஹா போதி நிறுவனத்தின் செயலாளர் சட்டத்தரணி டில்ஷான் ஜயசூரிய, இந்திய மற்றும் ஜப்பானிய பிரதிநிதிகள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு