பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, அக்டோபர் 10 ஆம் திகதி தற்போதைய பதில் அடமஸ்தானாதிபதி ஈதலவெட்டுணுவெவே ஞானதிலக்க தேரரைச் சந்தித்து ஆசி பெற்றார்.
வடமத்திய மாகாணப் பாடசாலைகளைப் பார்வையிடுவதற்காகச் சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே, பிரதமர் அடமஸ்தானாதிபதியைச் சந்திக்கவும் வருகை தந்திருந்தார். இதன்போது, அரசாங்கம் முன்னெடுத்துவரும் புதிய வேலைத்திட்டத்திற்கு ஆசி வழங்கிய அடமஸ்தானாதிபதி தேரர், கல்விக் கொள்கைகள், அரச கொள்கைகள், விவசாயக் கொள்கைகள் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதன் முக்கியத்துவம் குறித்துச் சுருக்கமான அறிவுரையையும் வழங்கினார்.
இந்நிகழ்வில், அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சருமான வசந்த சமரசிங்கவும் கலந்துகொண்டார்.
பிரதமர் ஊடகப் பிரிவு