பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களுக்கும் இந்திய கர்நாடக மாநிலத்தின் கலாச்சார அமைச்சர் ஸ்ரீநிவாஸ் கோட், பிரபல நடிகர் ககன் மலிக் மற்றும் தயாரிப்பாளர் நவின் குணரத்ன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று 2023.09.23 அன்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில், புத்த பகவான் பற்றிய படத்தின் 2ம் பாகத்தை தயாரிக்கும் திட்டம் குறித்து பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது.