ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பினால் (Asian Productivity Organization) வெளியிடப்பட்ட இலங்கைக்கான தேசிய உற்பத்தித்திறன் முன்னோக்குத் திட்டம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் கையளிக்கப்பட்டது.

கொழும்பில் நடைபெற்ற ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பு (APO) மற்றும் கொரிய அபிவிருத்தி நிறுவனத்தினால் (Korea Development Institute) சமர்ப்பிக்கப்பட்ட இலங்கைக்கான தேசிய உற்பத்தித்திறன் முன்னோக்குத் திட்டம் (National Productivity Roadmap) மற்றும் உற்பத்தித்திறன் நிபுணர்களுக்கான அங்கீகாரச் சான்றிதழை வெளியிடுவதற்கு இணையாக, நவம்பர் 20ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் இலங்கைக்கான தேசிய உற்பத்தித்திறன் முன்னோக்குத் திட்டம் கையளிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் மூலம் இலங்கையின் பிரதான கைத்தொழில் துறைகளான விவசாயம், மீன்பிடி, சுற்றுலா மற்றும் ஆடைத் தொழில் ஆகியன எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்படுவதுடன், இலங்கையின் தேசிய உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளும் வழங்கப்படுகின்றன. அத்துடன், இந்தத் திட்டத்தின் மூலம் கைத்தொழில்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதோடு, குறுகிய காலத்தில் வளர்ச்சி அடையக்கூடிய புதிய கைத்தொழில்களின் அபிவிருத்திக்கு ஆதரவளிக்கும் கொள்கைத் திட்டங்களும் முன்வைக்கப்படுகின்றன.

இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதமர், ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் தொடர்ச்சியான ஒத்துழைப்பைப் பாராட்டியதோடு, உள்நாட்டுச் சந்தையை பலப்படுத்துவதன் அவசியம் குறித்தும், உலகளாவிய தளத்திற்கான மூலோபாய அணுகல் வழிகளை அடையாளம் காண வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தினார்.

மேலும், முன்னேற்றம் கண்டுவரும் ஒரு மூலோபாய அணுகல் வழியாக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் (ICT) மீது கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய பிரதமர், இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்வதில் அதன் விரிவான பங்கு குறித்தும் தெளிவுபடுத்தினார்.

இந்த நிகழ்வில் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திருமதி. ஜே.எம். திலகா ஜயசுந்தர, ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் பொதுச் செயலாளர் கலாநிதி Indra Pradana Singawinata, ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் ஈரான் பிரிவின் தலைவர் திரு. Arsyoni Buana மற்றும் கொரிய அபிவிருத்தி நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழுவொன்றும் கலந்துகொண்டது.

பிரதமர் ஊடகப் பிரி