தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி

அறுவடைத் திருநாள் என்று அழைக்கப்படும் தைப் பொங்கல், விவசாயத்துடனும் இயற்கையுடனும் இணைந்த பாரம்பரிய வாழ்க்கை முறையை நம்பியுள்ள எமது சகோதர தமிழ் விவசாய சமுகத்தினர் சிறந்த அறுவடையை பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்புடன் சூரியனுக்கு நன்றி செலுத்துவதைக் குறிக்கிறது.
தேசிய கலாசாரத்தின் ஒரு அங்கமாக மாறியுள்ள தைப் பொங்கல் பண்டிகை, அமைதி, ஒற்றுமை, கருணை ஆகிய விழுமியங்களை உள்ளடக்கி, விவசாயப் பொருளாதார மறுமலர்ச்சியை மையமாகக் கொண்டு தற்போது நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் உணவுப் பாதுகாப்பு மற்றும் கிராமிய புத்தெழுச்சிக்கான செயற்திறமான எண்ணக்கருவுக்கு உத்வேகமாக அமையும் என்று நான் நம்புகிறேன்.
இந்து கலாசாரத்தின் சிறப்பை பிரதிபலிக்கும் தைத்திருநாள், இயற்கையோடு இயைந்து வாழவும், இந்து கலாசார பாரம்பரியத்திற்கு ஏற்ப எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் புத்தாண்டின் விடியலாக அமைய வேண்டும் என்றும் பிரார்த்திப்பதுடன், தைப் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் இலங்கை உட்பட உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு எனது தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தினேஷ் குணவர்தன
பிரதமர்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு
2023.01.13

Download Release