பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஃபஹீம் உல் அஸீஸ் மற்றும் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில், இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் பகிர்ந்து கொள்ளப்பட்ட நீண்ட மற்றும் சுமூகமான உறவுகளுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். பரஸ்பர ஆர்வமுள்ள பகுதிகளில் இந்த உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் இரு தலைவர்களும் கவனம் செலுத்தினர்.
இந்த சந்திப்பில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இலங்கை அதிகாரிகளில் பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரி, மேலதிக செயலாளர் திரு. மஹிந்த குணரத்ன மற்றும் வெளிவிவகார அமைச்சின் தெற்காசியா மற்றும் சார்க் பிரிவின் பணிப்பாளர் நாயகம்/ இராஜதந்திரப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் திரு. நிலுகா கதுருகமுவ ஆகியோர் அடங்குவர்.
பிரதமரின் ஊடகப் பிரிவு.