ஈரான் ஜனாதிபதியின் திடீர் மறைவுக்கு பிரதமர் இரங்கல்...

மேன்மைதங்கிய முஹம்மத் முக்பர்
ஈரான் இஸ்லாமிய குடியரசின் துணை ஜனாதிபதி

மேன்மைதங்கிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியான் ஆகியோர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததை அறிந்து நான் பெரிதும் கவலையடைகிறேன்.

ஈரான் மக்களுக்கும் இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும் மறைந்த ஜனாதிபதி அவர்கள் ஆற்றிய சேவைகள் பாராட்டத்தக்கவையாகும். உண்மையில், மேன்மைதங்கிய இப்ராஹிம் ரைசி அவர்களின் கடைசி வெளிநாட்டுப் பயணமானது, இலங்கை மக்களுக்குப் பெரிதும் பயனளிக்கும் ஈரானின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட உமா ஓயா நீர் மின்சாரம் மற்றும் நீர்ப்பாசனத் திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக இலங்கைக்கு மேற்கொண்ட விஜயமாகும்.

அவரது வருகையின் போது நான் அவருடன் நெருக்கமாகப் பழகினேன், ஈரான் நாட்டினதும் அதன் மக்களின் சுபீட்சம் மற்றும் உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான அவரது நேர்மையான தொலைநோக்கில் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன்.

இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பிலும் எனது தனிப்பட்ட சார்பிலும் ஈரான் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் மறைந்த ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சரின் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



தினேஷ் குணவர்தன
பிரதமர்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு

2024 மே மாதம் 20ஆந் திகத