17வது பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 17வது பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (18) முற்பகல் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய புதிய அமைச்சரவையில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகவும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

பிரதமர் ஊடக பிரிவு