போதைப்பொருள் பாவனை பிறழ்வுப் போக்கினைக் கொண்ட, கோளாறுகளைக் கொண்ட (SUD) நபர்களைத் தடுத்தல், சிகிச்சையளித்தல், முகாமைத்துவம் செய்தல் மற்றும் புனர்வாழ்வளித்தல் தொடர்பான 2026–2030 ஆம் ஆண்டுக்கான தேசிய மூலோபாயத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியதன் முன்னேற்றம் தொடர்பான தொடர்புடைய தரப்பினரின் அரையாண்டு மீளாய்வுக் கூட்டம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில், அனைத்து தொடர்புடைய அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் பங்கேற்புடன் 2026 செப்டெம்பர் 30 ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்றது.
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக, சுகாதார அமைச்சின் தலைமையின் கீழ், அமைச்சுகளுக்கிடையிலான ஒருங்கிணைந்த செயன்முறையின் ஊடாக இந்த மூலோபாயத் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகின்றது.
போதைப்பொருள் பாவனைக் கோளாறுகளை எதிர்கொள்வதற்கான விரிவான மற்றும் ஒருங்கிணைந்த தேசியக் கட்டமைப்பொன்றை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இதில் தடுப்பு, ஆரம்பகால அடையாளம் காணுதல், சிகிச்சை, புனர்வாழ்வு, பழைய நிலைக்கு மீண்டும் திரும்புவதைத் தடுத்தல் மற்றும் நீண்டகாலப் பின்தொடர்தல் ஆகியவற்றுக்கு விசேட முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது.
மூலோபாயத் திட்டம் ஆறு முக்கிய துறைகளை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. அவை: போதைப்பொருள் பாவனையைத் தடுத்தல், ஆரம்பகால அடையாளம் காணுதல், பரிசோதனை மற்றும் சிகிச்சை, புனர்வாழ்வு, சட்ட மறுசீரமைப்புகள் மற்றும் நிறுவன ரீதியான அங்கீகாரம், பழைய நிலைக்கு மீண்டும் திரும்புவதைத் தடுத்தல் மற்றும் பின்தொடர்தல், கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு என்பனவாகும்.
சுகாதாரம் மற்றும் ஊடகத் துறை அமைச்சு, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, இலங்கை பொலிஸ், சிறைச்சாலைகள் திணைக்களம், புனர்வாழ்வு பணியகம், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை, சமூக சீர்திருத்தத் திணைக்களம் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை ஆகியன, போதைப்பொருள் பாவனை பிறழ்வுப் போக்கினைக் கொண்ட (SUD) நபர்கள் மூலோபாயத் திட்டத்துடன் தொடர்புடையதாக 2026 ஜனவரி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் தமது நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றங்களை முன்வைத்தன.
பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) திருமதி சாகரிகா போகஹவத்த, சிரேஷ்ட உதவிச் செயலாளர் (அபிவிருத்தி) திருமதி எஸ்.யூ.ஏ. வீரசிங்க மற்றும் சுகாதாரம் மற்றும் ஊடகத் துறை அமைச்சு, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, இலங்கை பொலிஸ், சிறைச்சாலைகள் திணைக்களம், புனர்வாழ்வு பணியகம், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை, சமூக சீர்திருத்தத் திணைக்களம் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை ஆகியவற்றின் அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு