’திட்வா’ சூறாவளியின் காரணமாக ஏற்பட்ட திடீர் அனர்த்த நிலைமையின் பின்னர் நாட்டை வழமை நிலைக்குக் கொண்டு வருவதற்காக பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய மன்றம் அரசாங்கத்திற்கு 250 மில்லியன் ரூபா நிதியுதவியை வழங்கியது.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய மன்றத்தின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க உட்பட பணிப்பாளர் சபையினர் அதற்குரிய காசோலையை 2025 டிசம்பர் 08ஆம் திகதி பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களிடம் பிரதமரின் அலுவலகத்தில் வைத்து கையளித்தனர்.
அதனைத் தொடர்ந்து, நிதியத்தின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்கவுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையில் சுமுகமான கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றது.
பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, அமைச்சர் ஹினிதும சுனில் செனவி ஆகியோரும், பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய நிதியத்தின் பணிப்பாளர் சபை பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு