BCAS கல்வி நிலையத்தின் (BCAS Campus) பட்டமளிப்பு விழா பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இன்று (2024.05.13) பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

BCAS கல்வி நிலையத்தின் கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம் மற்றும் கல்முனை வளாக மாணவர்களுக்கான பட்டச் சான்றிதழ்களையும் விருதுகளையும் பிரதமர் வழங்கிவைத்தார்.

இந்த நிகழ்வில் BCAS கல்வி நிலையத்தின் தலைவர் திரு.ராஜேந்திர தியாகராஜா, பிரதம நிறைவேற்று அதிகாரி திரு.தெரேஸ் அமரதுங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு