நத்தார் வாழ்த்துச் செய்தி

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் நத்தார் பண்டிகை, மனித கண்ணியத்தையும் மனிதநேயத்தையும் மதிக்கும் ஒரு சமூகத்திற்கான அடித்தளமாகும். அவரது போதனைகள் அன்பு, கருணை மற்றும் காருண்யம் நிறைந்த கண்களால் உலகை யதார்த்தமாகப் பார்ப்பதற்கு சிறந்த முன்மாதிரிகளை வழங்குகிறது.

இது ஒடுக்கப்பட்ட மக்களை அதிலிருந்து விடுவித்து, சிறந்ததோர் சமுதாயத்தை உருவாக்குவதற்காக தன்னை அர்ப்பணித்த இயேசு நாதரின் தத்துவத்தின் அடிப்படையில் காலத்தின் உண்மையான தேவையாகும்.

மனிதர்கள், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் மீதும் கருணையைப் பகிர்ந்துகொள்வதற்கான அற்புதமான பாடத்தை வலியுறுத்திய இயேசுவின் போதனைகளின்படி வெறுப்பு மற்றும் குரோதத்தை ஒழித்து, பொருளாதார ரீதியாகவும் உணவுப்பயிர்கள் ரீதியாகவும் செழிப்புற்று விளங்கும் சுபீட்சமானதொரு இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக இந்த நத்தார் தினத்தை ஒரு புதிய ஆரம்பமாக ஆக்கிக்கொள்வோம்.

ஏழை, பணக்காரன், ஆண், பெண், சாதி, நிறம், போன்ற அனைத்துவிதமான வேறுபாடுகளையும் களைந்து, அமைதி, நல்லிணக்கம், சமத்துவம் என்ற அற்புதப் பாடங்களின் அடிப்படையில், மற்றவர்களுக்கு உதவி செய்து, அர்த்தமுள்ள வகையில் கொண்டாடி மகிழும் மகிழ்ச்சி நிறைந்த நத்தார் பண்டிகைக்கு எனது நல்வாழ்த்துக்கள்.



தினேஷ் குணவர்தன (பா.உ)
பிரதமர்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு

2023 டிசம்பர் 25