அனர்த்தத்தால் சேதமடைந்த ஹங்வெல்ல ராஜசிங்க மத்திய கல்லூரியின் தகவல் தொழில்நுட்ப நிலையம் இரண்டு நாட்களுக்குள் இயல்பு நிலைக்கு கொண்டுவரப்பட்டது.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் எண்ணக்கருவின் அடிப்படையில் பாடசாலை கல்வியை டிஜிட்டல் மயமாக்குவதற்கு உதவும் நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட கல்வி நடவடிக்கைகளை டிஜிட்டல்மயப்படுத்தும் செயலணியும் OREL IT தகவல் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து, ஹன்வெல்ல ராஜசிங்க மத்திய கல்லூரியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிலையத்தை இரண்டு நாட்களுக்குள் இயல்புநிலைக்கு கொண்டுவந்து இன்று (டிசம்பர் 22) மாணவர்களிடம் கையளித்தன.

அண்மையில் ஏற்பட்ட திட்வா புயல் காரணமாக ஹங்வெல்ல ராஜசிங்க மத்திய கல்லூரியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிலையம் கடுமையாக சேதமடைந்தது.

திடீர் அனர்த்த நிலைமை காரணமாக, நாட்டில் உள்ள ஏராளமான ப்டசாலைகளின் உட்கட்டமைப்பு அழிவடைந்ததுடன், பிரதமரின் செயலாளரின் அழைப்பின் பேரில் சேதமடைந்த டிஜிட்டல் உட்கட்டமைப்பை மீட்டெடுக்க OREL IT நிறுவனம் தனது உதவியை வழங்கியது.

அனுராதபுரம் மாவட்டத்தில் சேதமடைந்த பல பாடசாலைகளின் தகவல் தொழில்நுட்ப நிலையங்கள், பிரதமர் அலுவலகத்தின் வழிகாட்டுதலின் கீழ், OREL IT நிறுவனத்தால் கடந்த இரண்டு வாரங்களுக்குள் இயல்பு நிலைக்கு கொண்டுவரப்பட்டன. அதைத் தொடர்ந்து, OREL IT மற்றும் கல்வி நடவடிக்கைகளை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான செயலணி ஆகியவை ஹங்வெல்ல ராஜசிங்க மத்திய கல்லூரியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிலையத்தை இரண்டு நாட்களுக்குள் இயல்பு நிலைக்கு கொண்டுவந்து மாணவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளன.

அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் கல்வி நடவடிக்கைகளின் டிஜிட்டல் மயமாக்கலுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதன் மூலம், பாடசாலைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை கல்வி நடவடிக்கைகளை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான செயலணி ஏற்கனவே ஆரம்பித்துள்ளது.

இந்த நிகழ்வில் பிரதமரின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் கலாநிதி அர்ஜுன ரத்நாயக்க, OREL IT நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி உபேந்திர பீரிஸ், OREL IT நிறுவனத்தின் அதிகாரிகள், அரச அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு